பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

முதற் குலோத்துங்க சோழன்

லுள்ள வண்டாழஞ்சேரியாகும் என்று ஒருகல்வெட்டு உணர்த்துகின்றது.[1] அஃது இப்போது வண்டுவாஞ்சேரி என்ற பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலூகாவிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெருவழியிலுள்ளது. வண்டாழஞ்சேரி என்பது வண்டுவாஞ்சேரி என்று பிற்காலத்தில் மருவி வழங்கிவருகின்றது.

இவன், சிவபெருமானிடத்தில் அளப்பரிய பேரன் புடையவனாய்த் திருவாரூரில் அரிய திருப்பணிகள் செய்துள்ளனன். இவன் இறுதியில் திருவாரூரில் தியாகேசரது திருவடிகளிற் கலந்தனன் என்றும் தியாகேசரது திருப்பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்று என்றும் திருவாரூர் உலாக் கூறுகின்றது. இதனால், இவன் அப்பெருமானிடத்துக் கொண்டிருந்த அன்பின் முதிர்ச்சி ஒருவாறு விளங்கும்.

2. அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன் :- இவன் சோழமண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரின் தலைவன் ; குலோத் துங்கசோழனது படைத்தலைவர்களுள் ஒருவன். அரச-


  1. ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று. ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுத் திரு நறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான கருணாகரனாரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு.' (S. I. I. Vol. IV. No. 862).