பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ றி மு க ம்

உலக இலக்கியம் என்பது பெரியகடல். அதன் ஆழத்தை யார்தான் முற்றிலும் காண முடியும்?

உலக இலக்கியப் பெருங்கடலில் நீந்திக் களிக்கவும், ஆழ்ந்து உள்ளே மல்கிக் கிடக்கும் பொக்கிஷங்களே ஒரளவுக்குக் கண்டு மகிழவும் ஆங்கிலம் பெரிதும் துணை புரிகிறது.

  • ஆங்கிலத்தின் உதவியால் உலக இலக்கியக் கடலே ஒருவாறு கரை கண்டவர்கள் நாங்கள் என்று நாங்களே பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும்’ என்று கு. ப. ராஜகோபாலன் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிருச். - - நான் அவ்வாறு கூறும் நிலையில் இல்லை. கடந்த முப்பது வருஷங்களாக தான் இலக்கிய மாணவகுக வாழ்ந்து, எண்ணற்ற புத்தகங்களைப் படித்து வந்திருப் பினும், நான் இன்னும் படிக்காமலே விட்டு வைத்துள்ள அற்புத நூல்கள் மிகப் பலவாகும் என்ற உணர்வு என்னுள் என்றும் நீடிக்கிறது. -

கடலினுள் இறங்கி, மூக்குளித்து, மதிப்புள்ள முத்துச் சிப்பிகளை அள்ளி எடுத்துப் பயன் பெறுவதற்குப் பதிலாக, பெரும் பகுதி நேரங்களில் கடலோரத்திலேயே நின்று, அலைகள் கொண்டு வந்து சேர்க்கிற வெறும் சிப்பிகளைக் கண்டு தான் திருப்தி அடைந்து வத்திருப்ப தாகக் கூட சிறு வேதனை எனக்கு ஏற்படுகிறது உண்டு. எனது சொந்த ஆசையும் தவிப்பும் எப்படியும் இருக்கட்டும். நான் படித்த புத்தகங்களில் ரசனைக்கு உரிய விஷயங்களாகவும், கேட்டவற்றில் சுவையானவை