பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

முள்வேலிகள்



    • இந்த உண்மைவிளம்பியும் புலவரும் கோள் சொல்லிக் கோள் சொல்லியே என்னேப் பாழாக்கிட்டாங்க. என் புத்தியைச் செருப்பாலேதான் அடிக்கணும்.'

அவங்க ரெண்டு பேரும் நீங்க சிநேகிதம் பாராட்டிப் பழகற மாதிரிக் கெளரவமானவங்க இல்லை. ஏதோ உங்க கெட்ட காலம் அவங்க ரெண்டு பேரிட்டவும் ரொம்ப நம்பிப் பழகிட்டீங்க."

'இன்னிக்கோட அந்தப் பழக்கத்துக்குத் தலைமுழுகி யாச் ' என்றான் கண்ணன். பேசிக்கொண்டே இருந்தவன் இரண்டு மூன்று தடவை அடுத்தடுத்துத் தும்மினன்.

'மழையிலே நனேஞ்சது உங்க உடம்புக்கு ஆகலே! பேசாம அமிர்தாஞ்சனத்தைத் தடவிட்டுத் தூங்கனும் நீங்க."

கண்ணன் மனைவி சொன்னபடியே செய்தான். வெளியே மழை இன்னும் விடவில்லை. முன்னே விட அதிகமா கியிருந்தது. காற்றும் புயலும் அதிகமாகவே மின்வாரியம் தானகவே மின்சார சப்ளேயை முன்னெச்சரிக்கை நடவடிக் கையாகத் துண்டித்த விட்டது. மாலையில் இாவில்-நள்ளிர வில் மழை விடவே இல்லை. வானமே பொத்துக் கொண்டுக் கொட்டுவது போலக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. மின்சாரமும் போனது போனதுதான்.விட்டது. உடம்பு அனலாய்க் கொதித்தது.

18

கண்ணனும் குழந்தை கலாவும் கட்டிலில் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள். சுகன்யா கீழே தரையில் ஜமுக்காளத்தை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தாள்.