பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

165

களை ஆழப்படுத்தி ஒவர் ஹெட் டேங்குக்க நீர் ஏற்ற ஒப்புக் கொண்டார்கள். மாணவர்கள் முன்னிலையில் ஆக்டிங் வி.சி. டேல்பிள்கள' இதற்கு உறுதி கூறினார்.

உண்ணாவிரதம் முடிந்த பின்பும் கூட கனகராஜ் அவளைச் சந்திக்க வரவில்லை. அவளுக்கும் ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் பலருடைய பாராட்டுக்களிலும், மாணவ மாணவிகளின் புகழிலும் அவன் வராதது பற்றிய ஏமாற்றம் மறந்து விட்டது. இந்தப் போராட்டம் பல்கலைக் கழக வட்டாரத்திலும், மாணவர்களிடையேயும் அவள் அந்தஸ்தை உயர்த்தி விட்டது. அவள் ஒரு தலைவியாக உயர்ந்துவிட்டாள் அங்கே.

அன்று பகலில் வகுப்பில் கனகராஜ் தவிர்க்க முடியாமல் அவளேச் சந்திக்க நேர்ந்துவிட்டது. போராட்டம் முடிந்து அப்போதுதான் முதல் முதலாக வகுப்புக்களுக்கு மாணவிகள் வருகிறர்கள். கனகராஜின் சம்பிரதாயமான அநுதாப விசாரணை ஆரம்பமாயிற்று.

“ரொம்ப இகளத்து வாடிப் போய் விட்டீர்கள் சுலட்சணா! உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள், ப்ளிஸ் டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்,”-பொது இடங்களில் அவளை நீங்க, வாங்க என மரியாதைப் பன்மையில்தான் அவன் அழைத்தான்.

“உங்கள் அதுதாபத்துக்கும் அன்புக்கும் நன்றி. நான் பொதுக் காரியங்களுக்காக உழைக்கிறபோது என் உடம்பு . என் செளக்கியம்-என் நன்மை என்று பார்ப்பதில்லை. பொது நன்மையை மட்டும்தான் பார்ப்பது வழக்கம்! பொது நன்மையே என் இலக்கு.”

“பொது நன்மை என்ற பெயரில் நமது படிப்பு, நமது உடல் நலம் எல்லாம் கெட்டுவிட்டால் நம்முடைய பெற்றோர்களுக்கு யார் பதில் சொல்வது? யோசித்தீர்களா?”

மு-11