பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

சுலட்சணா காதலிக்கிறாள்

“என் தந்தை உங்கள் தந்தையைப்போல் தொழிலதிபரோ செல்வந்தரோ இல்லை. தொழிலாளிகளோடு தொழிலாளியாகக் குடிசையில் வசிப்பவர். முடிந்ததைச் செய்யும் வசதி எனக்கில்லை. ” காதலர்களேப்போல் அவர்கள் இருவரும் பல்கலைக்கழக எல்லையில் இடையிடையே சந்தித்துக் கொண்டாலும் இப்படிக் கருத்து மோதல்கள், கொள்கை உரசல்கள் அடிக்கடி அவர்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. படிப்பது, மார்க் வாங்குவது, போஸ்ட் கிராஜுவேட்ஸ் கலப்ரரிக்குப் போய் இண்டேர்னல் அஸெஸ்மெண்ட் மார்க்குகளுக்காகப் புத்தகங்களே எடுத்துக் கரைத்துக் குடிப்பது இவை தவிர வெளியே புயல் வீசினாலும், பூகம்பமே ஏற்பட்டாலும், இடி விழுந்தாலும்கூடக் கவனம் கலையக்கூடாது என்றிருந்தான் கனகராஜ். அவளோ வெளியே துரும்பு அசைந்தாலும், யாருக்கு எங்கே என்ன சிரமம் என்று விரைந்து ஒடிச் சென்று பார்க்கவும், உகவவும் தயாராயிருந்தாள். பொதுக் காரியங்கள், வேலைகள் கிடைத்தால் அவள் அதில் தன்னைக் கரைத்துக்கொண்டு விட-தன்னை மறந்துவிடப் பழகியிருந்தாள்.

அவனே தன்னைத் தவிர மற்றெல்லாவற்றையும் பற்றி நினைத்துப் பார்க்கக்கூடப் பழகவில்லை. ஆனாலும் அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினார்கள். இவர்கள் ஆருயிர்க் காதலர்களோ என்று பார்க்கிறவர்கள் மருண்டு வியக்கிற அளவுக்குப் பழகினார்கள். சந்தித்தார்கள். பேசிக் கொண்டார்கள்.

உதயா பல்கலைக்கழக அதிசயங்களில், விநோதங்களில் இது, முதன்மையானதாயிருந்தது. அரும்பு மீசையும் டி ஷட்டும், சுருள் முடியும், செலுலாய்ட் புன்முறுவலுமாக அவன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தான். கொள்கைகளில், முக்கவழக்கங்களில் அவள் அவனுக்கு நேர்மாறானவளாக இருந்தாள். அவனோடு மட்டுமில்லாமல் மற்றவர்களோடும்