பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சுலட்சணா காதலிக்கிறாள்


5

னகராஜைப் போன்ற அழகிய ஸ்மார்ட்டான இளைஞன் ஒருவன் சுலட்சணா தவிர வேறு எந்த இளம் பெண்ணிடம் அந்த மாதிரி ஓர் அன்பு அழைப்பை விடுத்திருந்தாலும் இத்தனே கடுமையாக மறுத்திருக்க மாட்டாள். அவனுடைய முகமன் வார்த்தைகளே இங்கிதமாகத் தட்டிக் கழிக்காமல் கறாராக உடனே "குட் பை" என்று அவனைக் கத்திரித்திருந்தாள் அவள்.

அலுங்காமல், குலுங்காமல், உணவு, உறக்கம், படிப்பு, சுயநலம் என்கிற நான்கு கோடுகளாலான ஒரே சதுரத்திற்குள் அடைபட்டு அழுகும் கனகராஜ் போன்றவர்களே வெறுப்பதைவிட அதிகமான அனுதாபத்தோடு பார்த்தாள் சுலட்சணா.

கண்டித்துச் சுற்றறிக்கை விட்டதோடு ஓயாமல் டீன் அண்ட் ஆக்டிங் வி. சி. என்ற முறையில் உடனே தன்னை வந்து சந்திக்கும்படி 'டல் பிள்ளை' சுலட்சணாவுக்கு ஒரு மெமோ வேறு அனுப்பியிருந்தார். மெமோவைப் பார்த்து அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது.

பொருளாதாரத் துறை, தமிழ் இலக்கியத் துறை போன்ற சில டிபார்ட்கெண்டுகளுக்கு நல்ல பெயர் இருந்தாலும் வேறு சில வட்டாரங்களில் உதயா பல்கலைக்கழகத்திற்கு உதவாக் கரைப் பல்கலைக்கழகம், ஊழல் பல்கலைக்கழகம், டிக்னிஃபைடு எலிமெண்டரி ஸ்கூல், டிக்னிஃபைடு ஹைஸ்கூல், க்ளோரிஃபைடு காலேஜ் என்றெல்லாம் அகடமிக் சர்க்கிளில் இருண்ட பெயர்கள் உண்டு. வி. சி., டீன் ஆகியோரின் ஊழல்களே இதற்குப் பெரிதும் காரணம். அன்று சுலட்சணாவுக்கு மெமோ அனுப்பியபோதும் இப்படி ஒரு குறுகிய நோக்கத்தோடுதான் அந்த மெமோவை அவளுக்கு அனுப்பி மிரட்டியிருந்தார் ஆக்டிங் வி. சி.