பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

177


பல்கலைக்கழகத்தில் சுலட்சணாவுக்கு யாரிடமும் எதற்காகவும் அநாவசியமான பயம் கிடையாது. அதுவும் டாக்டர் கையாடல் வல்லான்பிள்ளே எம். ஏ., பிஎச். டி.யிடம் மரியாதைகூடக் கிடையாது. தைரியமாக அவரது மெமோவை வாங்கிக்கொண்டு சந்திக்கச் சென்றாள், கனமான சோடாபுட்டிக் கண்ணாடி, பிதுங்கும் குண்டு விழிகள், எந்தக் கடுங்கோடையிலும் சூட்டு, கோட்டு, டை அணிந்து பார்க்க ஆந்தை போலிருப்பார் டல் பிள்ளை, ஆந்தைமூக்குக் கண்ணாடி அணிந்து நாற்காலியில் அமர்ந்திருப்பதுபோல் சாயல் இருக்கும். குரலிலும் ஏறக் குறைய ஆந்தையின் சாயல் தான்.

"மிஸ் சுலட்சணா! வீ ஆர் ஹியர் டு ஆர்கனைஸ் சோஷியல் செர்வீஸ் லீக் ஆன் பிஹாஃப் ஆஃப் திஸ் யூனிவர்ஸிட்டி" என்று கடுமையாகச் சொல்லி நிறுத்தி விட்டு ஆந்தை விழிகளால் அவளை ஊடுருவினார்.

"இஃப் யூ ஸே லைக் திஸ் வெல் அண்ட் குட் சார். பட் அன்ஃபார்ச்சுனேட்லி ஸோ ஃபார் யூ டிண்ட் ஆர்கனேஸ் எனி சச் ப்ரொக்ராம் ஆன் பிகாஃப் ஆஃப் த யூனிவர்ஸிடி சார்!"

"நீ யாரு அதை எல்லாம் சொல்ல? சோஷல் செர்விஸ் புரோகிராம் நடந்து ஸ்டேன்ஸுக்கு மார்க் எல்லாம்கூட முறையாகக் குடுத்திருக்கோம்..."

"டூயிங் கார்டன் வொர்க் இன் த காம்பஸ் இஸ் நாட் அட் ஆல் எ சோஷல் வொர்க் சார்!"

"ஆர் யூ டீச்சிங் மீ வாட் இஸ் சோஷல் வொர்க் அண்ட் வாட் இஸ் நாட் சோஷல் ஒர்க்?..."

"ஸாரி சார்..."

"நெள யூ மே கோ..."