பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

முள்வேலிகள்


"ஆமாம். அது நியாயமில்லைதான். அம்மிணி அம்மா விஷயம் எல்லாருக்கும் தெரிந்தாக வேண்டும்."

தலைவரின் தனியுரிமைக்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பவே அவர் அதை எல்லாருடனும் சேர்ந்தே தெரிந்து கொள்வதென்ற முடிவுக்கு வந்தார்.

கண்ணன் அம்மிணி அம்மாவைப் பற்றிய தன் ஆட்சேபத்தைக் கமிட்டியில் எல்லாருமே கேட்கும்படி சொல்லியாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டான். எப்படித் தொடங்கி எவ்வாறு சொல்லி முடிப்பது என்று கோவையாகத் திட்டமிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும் எப்படியோ மென்று விழுங்கிப் பூசி மெழுகினான் கண்ணன். ஒருவிதமாக அதை சொல்லி முடித்தாயிற்று. -

"அந்தப் பொம்பளை ஒரு மாதிரின்னு கேள்விப்பட்டேன். அவங்க காலனியோட நல்ல பேரையே கெடுத்துப்பிடு வாங்க போலிருக்கு."

"இந்தக் காலனியிலே வீடு அலாட் ஆகி இதிலே குடியிருக்கிற யாரும் நம்ம அஸோஸியேஷன்ல மெம்பராகலாம். அவங்க யாரு, என்ன செய்யறாங்க, ஆணா, பொண்ணாங்கிறதெல்லாம் நமக்கு அநாவசியம"-என்று அம்மிணி அம்மாவை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு வந்திருந்த அச்சுதன் மீண்டும் எழுந்து தம் கருத்தை உறுதியாக வற்புறுத்தினார்.

"எனக்கும் அச்சுதன் சொல்றதுதான் நியாயம்னு படறது'-என்று தலைவர் கூட அந்தப் பக்கமாகச் சாய்ந்தார்".

கண்ணனுக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அம்மிணி அம்மாவைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்த எல்லாவற்றையுமே பச்சை பச்சையாகக் கூட்டத்தில் போட்டு