பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

189

விடலாம். வலது கை விரல்கள் இல்லாவிட்டால் பாவம். அவனது வாழ்க்கையே வீணாகிவிடும்” என்று கூடியிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். ‘பிளாஸ்டிக் சர்ஜரியில் முடியாதது இல்லை’-என்று மற்றொருவர் சொன்னார்.

இரண்டு மணி நேரம் வரை இந்த சஸ்பென்ஸ் நீடித்தது. அதன்பின் வெட்டுண்ட மணிக்கட்டுப் பகுதியையும் உடம்பில் எஞ்சிய கையின் நுனியையும் பரிசோதித்த டாக்டர்களும் நிபுணர்களும் - இரண்டையும் இணைப்பது இனி மேல் சாத்தியமில்லை என்று தெரிவித்துவிட்டனர், வீராசாமியின் வலது கை மூளியாகத் தான் இருக்கும் என்றறிந்ததும் சுலட்சணா கதறினாள், அழுதாள். முடிவில் வேறு வழியின்றி மெளனமாகக் கண்ணீர் சிந்தினாள். மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் கருப்புச் சின்னமணிந்து பஜாரில் மெளன ஊர்வலம் சென்றார்கள். சுலட்சணா தலைமை வகித்தாள்.

‘நியாயம் கேட்ட மாணவனைக் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிய சமூகவிரோதியைத் தேடிக் கைது செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை கலெக்டருக்கும் மற்றவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்வைக்கப்பட்டது. அந்தப் பேட்டை ரவுடி ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவருக்கு வேண்டியவன் என்றும் போலீஸார் அவனைக் கைது செய்ய மாட்டார்கள் என்றும் வதந்தி பரவவே மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

பிரச்னை பெரிதாகி மாணவர்கள் போராட்டம் வலுத்து விடுமோ என்று பயந்து இரண்டு தினங்கள் வரை மெத்தனமாக இருந்த போலீஸார் மூன்றாவது நாள் அந்த ரவுடியைக் கைது செய்து லாக்கப்பில் வைத்தார்கள். குற்றப்பத்திரிகையும் தயார் செய்தார்கள்.

இரண்டு மூன்று நாள் இத்தனை ரகளை நடந்தபோதும், சுலட்சணாவின் பார்வையில் கனகராஜ் தட்டுப்படவே இல்லை. ‘பல்கலைக்கழகக் காம்பஸுக்கு வெளியே நடக்கும் தகராறு-