பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சுலட்சணா காதலிக்கிறாள்


“இருக்கலாம்! ஆனால் இந்த அன்பளிப்பே உங்களுக்கு உடல் ஊனமுற்ற ஓர் இளைஞனிடமிருந்துதான் வருகிறது மிஸ் சுலட்சணா!"

“ஐயாம் சாரி! உங்க மனசைப் புண்படுத்திட்டேன் போல இருக்கு..."

“நோ...நெவர்...நீங்க இதை ஏத்துக்கணும், எனக்காக...”

“சரி..."

அவள் மெனமாக அந்தச் செம்பு மோதிரத்தை தன் வலது கை விரலில் அணிந்து கொண்டாள். அது மோதிர விரலில் சேர்ந்தது.

“இதை நீங்க ஏலத்துக்கு விடமுடியாது... போகாது..."

“போனாலும் விடமாட்டேன்!"

“நன்றி...சுலட்சணா"

“நன்றி எல்லாம் நமக்குள் சொல்லிக்கொள்ளக் கூடாது."

“ஏன்?... நாம் ஒருவருக்கொருவர் விசுவாசமற்றவர்களா என்ன?"

“சில சமயங்களில் சில வார்த்தைகள் அந்நியமானவர்கள் ஒருவருக்கொருவர் உபசாரமாகச் சொல்லிக் கொள்ள மட்டுமே ஏற்பட்டுப் பயன்படுகின்றன. அவற்றை அந்நிய மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாது"-

“வெட்டினதுதான் வெட்டினான். இடது கையில் பட்டிருக்கலாம். பாவி...வலது கையில் வெட்டி என் வாழ்வை நாசமாக்கி விட்டான்."

“நீங்கள் பாய்ந்து அவனைத் தடுத்தபோது வலது கையால் அந்த ரவுடியைத் தடுத்ததால் வந்த வினை இது.