பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

215



இரண்டு பேரும் நெருங்கிப் பழகினீர்கள் என்பது காம்பஸ் முழுவதுமறிந்த உண்மை."

“பழக்கங்கள் எல்லாம் சிநேகிதங்கள் ஆகிவிட முடியாது.” . -

“சிநேகிதங்கள் எல்லாம் காதலாகி விட முடியாது என்று கூட இன்னொரு வாக்கியத்தையும் சேர்த்து இப்போது நம் இஷ்டப்படி சொல்லி விடலாம் அம்மா! ஏதோ இந்த யூனிவர்ஸிடி டீன் என்கிற முறையிலே ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் நட்பு முறிஞ்சு மனசு வேதனைப் படறதை நான் விரும்பல்லே. கனகராஜ் ரொம்ப நொந்து போயிருக்கான். எங்கிட்டச் சொல்லவே செய்தான்.”'

“நான் அப்படி எதற்கும் நொந்து போகலை சார்! எப்பவும் போல உற்சாகமாகத்தான் இருக்கேன்னு அவரைப் பார்த்தா நீங்க தாராளமாகச் சொல்லலாம் சார்.

டீன்கிற முறையிலே இப்போ அதிகாரத் தோரணயோட நான் பேசலைம்மா! கொஞ்சம் அவுட் ஆஃப் தி வேயாக உங்கிட்டச் சொல்றேன்னு வச்சுக்க...கனகராஜோட ஃப்ரண்ட்ஷிப்பை நீ விட்டுடப் படாது”

“உங்க யோசனையைவிட இதிலே என்னோட சாய்ஸ்' தான் இன்னும் முக்கியம். நீங்க சொன்னீங்களே கனகராஜ் வம்புதும்புக்குப் போகாதவன்’னு அது நூற்றுக்கு நூறு நிஜம். நடுத்தெருவிலே என்னை மாதிரி ஒரு பெண்னை நாலுபேர் முரடர்கள் கையைப் புடிச்சு இழுத்தாக்கூட நமக்கேன் வம்பு?'ன்னு ஒதுங்கிப் போயிடற அளவுக்கு அத்தனை பெரிய சாது சார் அவர். அவ்வளவு பெரிய சாதுவை இந்தக் காலத்திலே எந்தப் பெண்ணுமே விரும்பமாட்டாள் சார்.”

“நீ விரும்பினால் கனகராஜையே இப்போ இங்கே கூப்பிட்டனுப்பறேன். நேரேயே பரஸ்பரம் மனம்விட்டுப் பேசி நீங்க ஒருத்தருக்கொருத்தர் சமாதானப்படுத்திக்கலாம். ”