பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

சுலட்சணா காதலிக்கிறாள்

 மறுபடி எப்போடா திரும்பி வரே.

உன்னைத்தாண்டா கேட்கிறேன்! மறுபடி எப்போ இங்கே திரும்புவே'

எனக்கே தெரியாது! வருவேனோ இல்லையோ?” கனகராஜின் குரல் நைந்து உடைந்திருந்தது. கண்களில் நீர் முட்டிக் கொண்டு தளும்பி நின்றது. இன்னும் கொஞ்சம் பேசினால்கூட அழுதுவிடுவான் போலிருந்தது. சுகவனம் ஆறுதலாக அவனருகே சென்று,

அசடே: இதுக்காகவா இப்படி மனசு உடைஞ்சு போறே? இவள் இல்லாட்டா இன்னொரு விலட்சணாடா, சுலட்சணாவை விட்டா உலகத்திலே வேற அழகான பொம்பளேயே இல்லையாடா?’’

அவனால் அப்படி நினைக்க முடியவில்லை. உள்ளுக்குள் ரொம்ப உறுத்தியது. . . . . .

டேக் இட் ஈஸி கனகராஜ்! சுலட்சணா இல்லாட்டா இன்னொரு விலட்சணா.” மறுபடியும் சுகவனம் அருகே வந்து கனகராஜின் தோளைத் தட்டிக்கொடுத்துச் சொன்னான். நண்பனுக்கு விடைகொடுத்தான்.

கார் பல்கலைக்கழகக் காம்பஸில் வளைந்து வளைந்து சென்று வெளியே போகும் மெயின் ரோடை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அங்கங்கே ஸ்பீட் பிரேக்கர்கள்' இருந்ததால் நின்று நின்று போக வேண்டியிருந்தது.

உள் சாலையில் வசந்த மண்டபம் என்று அவர்கள் செல்லமாக அழைக்கும் போஸ்ட் கிராஜுவேட்ஸ் நூல் நிலையத்தின் அருகில் கார் திரும்பியபோது அதன் படிகளில் வீராசாமியைக் கைதழுவியபடி சுலட்சணா மேலேறிப் போய்க்கொண்டிருந்தாள். வெட்டுண்ட வலது கைக்குப்