பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

முள்வேலிகள்


ஒரு சினிமாக் கவர்ச்சிப் பத்திரிகையை எடுத்துக் காட்டினன் நண்பன். கண்ணனுக்கு அதைப் பார்க்கக் கூச்சமாயிருந்தது.

அதில் திரையுலகைக் கலக்க வந்திருக்கும் புது செக்ஸ் அணுகுண்டு என்ற தலைப்புடன் முக்கால் நிர்வாண நீச்சல் உடையில் ஒரு கட்டிளம் பெண்ணின் படம் பிரசுரமாகியிருந்தது. அந்தப் பெண்ணைப் பக்கத்து வீட்டில் பார்த்திருப்பது நினைவு வந்தது கண்ணனுக்கு. அம்மிணி அம்மாவின் இரண்டாவது மகள்தான் அந்த செக்ஸ் ராணி. வீட்டில் புடைவையும் தாவணியுமாகத் தென்படும் அந்தப் பெண் வெளியே இப்படி ஒரு கோலமும் கொள்ளமுடியும் என்பதை நம்பக் கூடமுடியாமல் இருந்தது. தான் எவ்வளவு சொல்லியும் அந்த வீட்டைப் பற்றித் தவறாக நினைக்காத தன் மனைவிக்குச் சாட்சியம் காட்ட இதுதான் சரியான தடயம் என்று தீர்மானித்த கண்ணன் நண்பன் காட்டிய அந்தக் கவர்ச்சிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு அப்படியே மனைவியைக் காண உள்ளே சென்றான். அவளுக்குச் சரியான பாடம் புகட்ட இந்தப் படமே போதும் என்பது அப்போது அவன் எண்ணமாயிருந்தது.

ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. கண்ணனின் மனைவி அந்தப் படத்தைப் பார்க்கவே முன் வரவில்லை. கோபத்தோடு பொரிந்து தள்ளினாள்:

"எல்லாம் நீங்களே பார்த்துக்குங்க! இந்தக் கன்றாவி எல்லாம் நான் ஒண்ணும் பார்க்கவேண்டாம்"---என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"நம்ம மேலே உள்ள அக்கறையாலே என் சிநேகிதன் இதை எல்லாம் சொல்லி எச்சரிக்கிறான். அவனுக்கு நான் ரொம்பக் கடமைப் பட்டிருக்கேன்."