பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

42

 பாகவதர். சில நிமிட மெளனத்துக்குப் பின் அந்த மஞ்சள் பத்திரிகையை எடுத்துக் காண்பித்து அதில் எழுதியிருப்பதை ஒளிவு மறைவின்றி அவர்களுக்குச் சொன்னர் பாகவதர்,

அதைக் கேட்டு அம்மிணி அம்மாவும், அவளது பெண்களும் கலகலவென்று சிரித்தார்கள்.

"பாகவதரே! இதற்காகவா இவ்வளவு பெரிய அடிப்படையோடு கதை கிதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தீர்கள்? இது ரொம்பப் பழைய சங்கதி! இந்தப் பத்திரிகையிலேருந்து யாரோ ஒருத்தன் கே. சி. எம் ஸ்டுடியோவிலேயே என்ட மோளையைச் சந்திச்சுப் பயங்காட்டி ரெண்டாயிரம் குடுத்தா இதை நிறுத்திடறேன்னிருக்கான். அவள் மசியலே; முடியாதுன்னுட்டா. நானும் அவ செய்தது தான் சரின்னுட்டேன். இதைப் பார்த்து நீங்க ஒண்னும் கலங்கவேண்டாம். உங்களைப் போல ஒரு பாகவத சிரேஷ்டரோடு என்னைச் சம்பந்தப்படுத்தி இப்பிடி எழுதினதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும். எனிக்கு இதிலே கொஞ்சமும் வருத்தமில்லே. உங்களுக்கு ஒருவேளே யாரோ ஒரு கெட்ட பொண்னேட நம்மளை இப்படிச் சம்பந்தப்படுத்தி எழுதிக் களங்கப்படுத்திட்டானேன்னு வருத்தமிருக்கலாம்" என்றாள் அம்மிணி.

"எனக்கு ஒரு வருத்தமுமில்லே! நான் இது மாதிரிப் பயமுறுத்தலுக்கு எல்லாம் பயப்படறவன் இல்லே" என்றார் பாகவதர்.

"பின்னே இதை ஒரு பொருட்டா மதிச்சு இவ்வளவு நேரம் வீணடிச்சிருக்க வேண்டாமே."

"உண்மையை உங்களிடம் மறைக்கப் படாது பாருங்கோ! அதான் கொண்டு வந்து அப்படியே படிச்சுத் காண்பிச்சேன்."