பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

47

நன்றி கூறினாத்தான் மத்தவங்களுக்குப் பெருமையா இருக்கும். நீங்க கூட்டத்துக்குத் தலைமை வகிச்சா நான் நன்றி கூறியாகணும்னு நேர்ந்துவிடும். இன்றோ தலைமை பாகவதருக்குப் போய்விட்டது. நன்றியையாவது தலைவர்ங்கிற முறையிலே நீங்க சொல்லிடணும்’'--என்று பவ்யமாக எடுத்துரைத்தான்.

முதலில் அடக்கமாக மறுத்து ஒதுங்கப் பார்த்த தலைவர் அப்புறம் சரி என்று சம்மதித்தார். அப்பாடா என்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டான் கண்ணன். தலைவர் தம்முடைய நன்றியுரையில் தமது பங்கிற்கு அம்மிணியம்மாளின் தர்ம சிந்தனையையும், தெய்வ பக்தியையும் வானளாவப் புகழ்ந்தார். பாகவதர் இருப்பதானது தங்கள் காலனியின் பெருமையையே உயர்த்தக் கூடியது என்றும் புகழ்ந்து கூறினார். கண்ணன் சாமர்த்தியமாக ஒதுங்கி விட்டதைப் பாகவதரும், அம்மிணி அம்மாளும் கவனித்துப் புரிந்து கொண்டார்கள். அவன் ஏதோ 'காம்ப்ளெக்ஸ்' காரணமாக வீணுக்கு அலட்டிக் கொள்வதாக அவர்களுக்குத் தோன்றியது. காலனியில் யாருமே 'உண்மை விளம்பி'யைப் படித்துப் பாதித்ததாகவோ, பாகவதர்-அம்மிணி அம்மாள் நெருக்கத்தைப் பற்றிக் கவலைப் பட்டதாகவோ காண்பித்துக் கொள்ளவில்லை. ஒருவேளை இத்தகைய செய்திகள் மூலம் இன்று ஒருவருடைய கவர்ச்சி அதிகமாகுமே ஒழியக் குறையாது'--என்று பாகவதர் கூறிய விளக்கம்தான் சரியானதோ என்று கண்ணனுக்கே இப்போது தோன்றியது.

காலனியில் கோவில் கட்டுவதற்கான துணைக் கமிட்டியில் பாகதவர்---அம்மிணி அம்மாள் இருவருமே இடம் பெறுவதை அவனால் தடுக்க முடியவில்லை. தாங்கள் அந்தக் கூட்டத்திலும் கமிட்டியிலும் அவ்வளவு முக்கியத்துவம் பெற்றது.