பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

முள் வேலிகள்

 இதனால் அவனுக்குப் பயந்து மனைவியும், குழந்தையும் அவன் வீட்டில் இருக்கும்போது அவனறியப் பக்கத்து வீட்டோடு பேச்சு வார்த்தைகள் இல்லாமல் ஜாக்கிரதையாக நடிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர். கண்ணனின் போக்கு அவர்களை மிகவும் பாதித்திருந்தது.

கோயில் கட்டுவதற்கான கமிட்டி அமைக்கப்பட்டுப் பதிவானதும் முதல் வருமானமே அம்மிணி அம்மாளிடமிருந்துதான் வந்தது. கமிட்டியின் பெயருக்கு ரூபாய் இருபத்தையாயிரத்துக்கு ஒரு செக் அனுப்பியிருந்தாள் அந்த அம்மாள். கமிட்டி அப்படியே அவளைக் கொண்டாடியது. புகழ்ந்தது.

அடுத்த கமிட்டிக் கூட்டத்திலேயே தங்களுக்கு விருப்பமான இன்னொரு காரியத்தையும் பாகவதர் சுலபமாகவே நிறைவேற்றிக் கொண்டார்.

அவர்கள் வசித்த அந்தக் காலனிக்கு வெறும் ஹவுஸிங் யூனிட் நம்பர் 64 என்று மட்டும் அநாமதேயமாக ஒரு எண்ணின் பெயர் இருந்து வந்தது. அதை 'சாஸ்தா நகர் எக்ஸ்டென்ஷன்' என மாற்ற வேண்டும் என்றார் பாகவதர்.

அன்று எப்படியாவது அதை எதிர்த்தாக வேண்டும் என்பதற்காக அதே கூட்டத்தில் மற்ருெருவரிடம் சொல்லி அதை மறுத்து வேறு பெயரை முன்மொழியச் செய்தான் கண்ணன். மறுப்பதற்கு அவன் தேர்ந்தெடுத்த ஆள்தான் புலவர் மகிழ்மாறன்.

"இங்கே ஏற்கெனவே மலையாள ஆதிக்கம் அதிகமாயிருக்குன்னு நம்ம காலனிவாசிகள் மத்தியிலே ஒரு கெட்ட பெயர் வந்திருக்கு! எனவே நம் பண்பாடுகளையும் கற்பின் சிறப்பையும் வற்புறுத்துகிற மாதிரி இதற்குக் 'கண்ணகி நகர்'