பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

முள்வேலிகள்

இதைக் கேட்டுக் கண்ணன் தன்னை அவர் வகையாக மடக்கி விட்டது போல உணர்ந்தான். உடனே காலனி அஸோஸியேஷன் செயலாளர் பதவியையே ராஜிநாமா செய்து விடலாமா என்று கூட ஆத்திரம் வந்தது அப்போது அவனுக்கு.

"பாகவதர் பறஞ்சது சரி. நீங்கதான் இதுக்கு வழி பண்ணனும்"---என்று அம்மிணி அம்மாளும் சேர்ந்து கொள்ளவே கண்ணனுக்குக் கடுப்பு மேலும் அதிகமாயிற்று.

கொஞ்சம் யோசித்துச் சுதாரித்துக் கொண்டு, அஸோஸியேஷன் மூலமாச் செய்யறதைவிட நீங்க ரெண்டு பேரும் தனித்தனியே பணத்தைக் கட்டி உங்க ரெண்டு வீட்டுக்கும் கேபிள் கனெக்க்ஷன் கேட்டுக்கிறது ரொம்ப சுலபம்"--என்றான்.

"நான் காலனியில் இருக்கிற எல்லாருடைய பிரசினை'களும் தீர யோசனை சொல்றேன். நீங்க என்னடான்னா எங்க ரெண்டு பேர் பிரசினையும், உங்க பிரசினையும் தீர மட்டும் யோசனை சொல்றீங்க..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! நீங்க ரெண்டு பேரும் இதற்கு வழி பண்ணிக்கலேன்னா நான் சட்டப்படி ஏதாவது கடுமையாகச் செய்ய வேண்டியிருக்கும்."

இதைக் கேட்டுப் பாகவதருக்கும் பொறுமை மீறி ஆத்திரம் வந்துவிட்டது. அவரும் கறாராக ஒரு பதிலை உடனே தெரிவித்தார். "நான் உம்மைப் பொது மனிதர்னு மதிச்சு இதுவரை மரியாதை கொடுத்தேன். நீரோ சுயநலமாக மட்டுமே பேசுகிறீர். உம்மால் முடிஞ்சதை நீர் செய்துக்கலாம். கவலையில்லை.

மேற்கொண்டு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று கேட்கக் காத்திராமல் பாகவதரும் அம்மிணி அம்மாளும் தத்தம் வீட்டுக்குள்ளே திரும்பிப் போய்விட்டார்கள்.