பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

63

தெருக் கோடியில் 'வெட்கிரைண்டிங் மிஷன்--ரோலர். ஃப்ளவர் மில்'--என்ற போர்டுகள் அழிக்கப்பட்டு--"ஈர அரவைப் பொறி--உருளை மாவுப் பொறி'--எனத் தமிழில் தனக்குத் தோன்றியது போல் மொழி பெயர்த்து எழுதியிருந்தான் புலவரின் ஆள் அதைப் படித்துவிட்டு யாரோ விவரம் புரியாமல் அதன் உரிமையாளரிடம் வந்து, "நாட்டாரே! மாவு மில்லை எப்பப் பொரி கடலக் கடையா மாத்தீனிங்க?" என்று கேட்டதாகக் கண்ணன் காதில் கூட விழுந்திருந்தது: எல்லாவற்றையும் செய்த புலவர் தமக்கு நன்கொடை கொடுத்தவர்கள் வீட்டுச் சுவர்களில் மட்டும் கை வைக்கவே இல்லை. 'ரெட் ரோஸ்' என்று கண்ணன் வீட்டு முகப்பில் ஆங்கிலத்தில் பதித்திருந்த பெயர்ப்பலகை தாரில் நீராடாமல் அப்படியே விடப் பட்டிருந்தது எல்லார் கண்களையும் உறுத்தியது.

இதை எல்லாம் விடப் பயங்கரமான தமிழாக்கம் காலணி முகப்பில் இருந்த 'விமன்ஸ் கன்ஸ்யூமர் கோவாப்ரேடிவ் சொஸைடி' என்ற போர்டை அழித்துப் பக்கத்திலேயே 'பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுக் கழகம்'--என விலாப், புடைக்க நகைக்கும்படி எழுதியிருந்ததுதான். அதைப் படித்துச் சிரிக்காதவர்களே கிடையாது.

இப்படி எல்லாம் புலவர் தாறுமாறாகக் கேலிக் கூத்துப் பண்ணியிருந்தும் தனது கூட்டணியில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகக் கண்ணன் கூட்ட நோட்டிஸை. எல்லாருக்கும் அனுப்புமுன் புலவரைக் கூப்பிட்டனுப்பினான். புலவர் தன்மானப் படையுடன் வந்தார். கண்ணன் நிலைமையை விளக்கி, "நான் அஸோஸியேஷன் செயலாளர் பதவியை விட்டு விலகிக்கலாம்னு பார்க்கிறேன்"--என்றான்.

"கூடாதுங்க! நீங்களா விடவே கூடாது. பயந்தாங், கொள்ளிம்பாங்க. பேரவையைக் கூட்டுங்க பயப்படாதீங்க...அவங்க என்னதான் செய்யிறாங்கன்னு பார்த்துடுவோம். நானும் பேரவைக்கு நம்ம செயல் வீரர்களோட