பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

73

"நீங்க ஒண்ணு! அனாவுக்கு அனா வருதில்லே? அய்யப்பன் நகரத்து மேலே அன்புள்ளவங்க கழகம்னு பொருள் கொள்ளணும். நகர் வளர்ச்சியிலே அன்பில்லாதவங்களா அதிலே உறுப்பினரா இருப்பாங்க...?"

"அது ஏன்யா கழகம்னு போட்டீரு? அரசியல் வாடை அடிக்குதே? சங்கம்னு போடக் கூடாதோ?"

"அவங்க சங்கம்னு போட்டிருக்காங்க! சும்மா மிரளட்டும்னு தான் கழகம்னு போட்டேன். பாருங்க! ரெண்டே மாசத்துலே அத்தனை பேரும் அஸோஸியேஷனை விட்டுட்டுக் கழகத்துக்கு ஓடி வரப் போறாங்க..."

புலவர் போகும்போது லெட்டர் ஹெட் முதலிய செலவு வகைக்கு ரூபாய் ஐம்பது ஆகிவிட்டது என்று தலையைச் சொறிந்துகொண்டு நின்றார். கண்ணன் மனத்துக்குள் அவரைத் திட்டித் தீர்த்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துத் தொலைக்க வேண்டியதாகிவிட்டது.

அடுத்து வந்த காலம் அவனைப் படாத பாடு படுத்தியது. மின்சார இலாகா, பாகவதர், அம்மிணி அம்மாள் இவர்கள் மேல் அவன் போட்டிருந்த வழக்கு ஆறுமாத காலம் இழுத்தடித்து ரூபாய் நாலாயிரம் செலவுக்குப் பின் கோர்ட்டில் தள்ளுபடி ஆகிவிட்டது. அவனுக்கு அலைச்சலும் வீண் பணச் செலவும்தான் கண்ட பலன்.

அங்கே வீடுகளைக் கட்டும்போது ஹவுஸிங் யூனிட் காரர்கள் அநுமதித்து இசைந்ததனால்தான் வீடுகளுக்கான ஒவர் ஹெட் லயன் கனெக்க்ஷன் தரப்பட்டிருக்கிறது.அதனால் மின்சார வாரியமோ, பாகவதரோ, அம்மிணி அம்மாளோ இதற்குப் பொறுப்பாக முடியாது என்று காரணம் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார்கள். ஹவுஸிங் யூனிட்டுக்கு இன்னும் அவன் முழுமையாகப் பணம் கட்டி முடித்துப் பத்திரம் பதிவு செய்து வாங்கிக் கொள்ளவில்லை. தவணை முறையில் பல ஆண்டுகள் பணம் கட்டி முடித்த