பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

முள்வேலிகள்

அம்மாளையும் பற்றி மேலும் பல தடவை தாறுமாறாக எழுதியும் அது அவர்களையோ மற்றவர்களேயோ ஒருசிறிதும் பாதிக்கவில்லை.

கோயில் திருப்பணிக்கு முதலில் கொடுத்த இருபத்தையாயிரம் நிதியைத் தவிரத் தன் பெண்கள் மாலா, பாலா நாட்டிய நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்து அதன் மூலம் மேலும் ஒர் ஐம்பதினாயிரம் ரூபாய் திரட்டிக் காலனி அஸோஸியேஷனுக்குக் கொடுத்திருந்தாள் அம்மிணி அம்மாள்.காலனி நலன்நாடுவோர் சங்கத்தில் பாகவதருக்கும் அம்மிணி அம்மாளுக்கும் நல்ல செல்வாக்கு இருந்தது. சங்கத்தின் புதுச் செயலாளர் நீலகண்டனின் பெயருக்கும் மதிப்பிருந்தது.

"பழைய கண்ணன் மாதிரி இந்த ஆள் சவடால் பேர்வழி இல்லே! ஆனா அடக்கமா இருந்துக்கிட்டே பெரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிச்சிருக்கான் இந்த மனுஷன்" ---என்று காலனி முழுவதும் நீலகண்டனைக் கொண்டாடியது. கண்ணனை எல்லாரும் மறந்தே போன மாதிரி இருந்தது. ஆனாலும் கண்ணனின் அடிமனத்தில் தன் இரு பக்கத்து வீட்டுக்காரர்கள் மேலும் ஏற்பட்டிருந்த ஆக்ரோஷம் மட்டும் தணியவே இல்லை.

அவ்வப்போது முடிந்த தொல்லைகளை அவர்களுக்குக் கண்ணன் செய்யத் தவறுவதே இல்லை. சனிக்கிழமை, சனிக்கிழமை இரவு ஏழு மணி முதல் பதினோரு மணி வரை காலனியிலுள்ள ஆஸ்திக அன்பர்கள் சிலர் கூடிப் பாகவதர் வீட்டில் பஜனைப் பாடல்களைப் பாடி வந்தனர். இந்தச் சனிக்கிழமைப் பஜனை தன் தூக்கத்தைப் பாதிப்பதாகவும், சத்தம் பொறுக்க முடியாமல் காலனிவாசிகள் அவதிப்படுவதாகவும் பஜனை சத்தம் சில வயதான நெஞ்சுவலிககாரர்களின் உயிரைக் கூடப் பாதிக்கும் என்றும் கண்ணன் அ. அ. க மூலம் போலீஸ் கமிஷனருக்குப் புகார் எழுதிப் போட்டான். பாகவதருக்கு இடையூறு செய்தோம் என்ற