பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

97

‘’எந்த மாதிரிப் பொழைப்பு நடத்தறாங்க? உங்களுக்கு அவங்களைப் பத்தி என்ன தெரியும்? எவனோ பொறாமைக்காரன் சொன்னதை நம்பி நாக்கிலே நரம்பில்லாமப் பேசாதீங்க... அவங்க அளவு தாராள மனசு யாருக்கும் கெடையாது...‘’

‘’ஆங்... தாராளம்...... பெரிய தாராளம் தாண்டீ. ஏன்னா எந்த ஆம்பிளை வந்தாலும் பணத்தை வாங்கிக் கிட்டு ரொம்பத் தாராளமா... ‘’

வாயிற் கதவை யாரோ பலமாகத் தட்டினார்கள். கண்ணன் திறந்தால் நாகசாமி பாகவதர் நின்றுகொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் அவன் வாங்க என்று சொல்லாமலிருந்தும் கூட அவராகவே உள்ளே வந்தார். அவராகவே ஆரம்பித்தார்:

‘’கண்ணன்! இதென்ன இப்பிடித் தெருவிலே போறவங்க வர்றவங்கள்ளாம் உங்க வீட்டு வாசல்லே கூட்டமா நின்னு வேடிக்கை பார்க்கிற மாதிரிப் பண்ணிட்டீங்க? இதெல்லாம் என்ன?’’

‘’உங்களை யாரு தூது அனுப்பிச்சாங்க? அந்த மலையாளத்துப் பொம்பிளைதான் அனுப்பிச்சாளா? நீங்க யாரு என் வீட்டு விஷயத்துலே வந்து தலையிடறதுக்கு?‘’

‘’நியாயமான கேள்விதான் கண்ணன்! ஆனா நீங்க என்னை விரோதியா நெனைக்கிற அளவு நான் உங்களை இன்னும் என் விரோதியா நெனைக்கலே. அதுனாலே உங்களைச் சமாதானப்படுத்த வந்திருக்கேன்னுதான் வச்சுக்குங்களேன். ‘’

"இங்கே உங்க சமாதானத்தை யாரும் தேடலே. நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போகலாம்.'"

‘’நீங்க இப்படிப் பேசறதுனாலே மனசு வருத்தப்பட்டு உடனே வெளியேறிப் போயிடறவன் நான் இல்லே. இதோ