பக்கம்:ராஜாம்பாள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 193

கொண்டு வந்தார். நான் அவருக்குத் தெரியாமல் பின்ன லேயே போனேன்.

நேற்றுப் பெய்த பெரிய மழையால் கூவம் ஆற்றில் தண்ணீர் ஜாஸ்தியாகப் போனதால் கரைகள் புரண்டு தெருவெல்லாம் தண்ணீராகவே இருந்தது. நாயுடு சிந்தா திரிப்பேட்டைப் பறைச்சேரியில் நான்காவது சந்தில் புகுந்து ஒரு சிறு குடிசையின் உள்ளே போனார். நானும் கூடவே புகுந்தேன். அநேக தரம் பின்னல் யாராவது வரு இரு ர்களா என்று அவர் திரும்பிப் பார்க்கையிலெல்லாம் நான் மறைந்துகொண்டதால் யாரும் பார்க்கவில்லை என்று எண்ணிக்கொண்டு உள்ளே புகுந்தார். வாசலுக் குள் நான் போனவுடனே பக்கத்தில் காலடிச் சத்தம் கேட்ட தால் சட்டென்று திரும்பிப் பார்த்தார். உள்ளே வந்தது அந்நியனென்று தெரிந்தவுடனே கையிலிருந்த தடியால் என்னே ஓர் அடி அடித்தார். அந்த அடியைப் பட்டுக் கொண்டு நான் தயாராய் வைத்திருந்த விலங்குகளை அவர் கைககளிலும் காலிலும் மாட்டிவிட்டேன். இதற் குள்ளாகப் பின்னல் யாரோ ஓடிவந்ததாகத் தெரிந்தது. நான் திரும்பிப் பார்க்குமுன் கொள்ளிக்கண்ணனும் அமா வாசையும் ஒருவன் கத்தியும் ஒருவன் தடியும் வைத்துக் கொண்டு வந்து எதிர்த்தார்கள். உடனே என் சாமர்த்தி யத்தால் மேலே எகிறி அப்பால் குதித்தேன். அப்படிக் குதித்தும் கத்தியின் குத்து முகத்திலும் கம்பின் அடி முதுகிலும் பட்டது. உடனே என் ஜேப்பிலிருந்த கைத் துப்பாக்கியால் இருவன்ரயும் முழங்காலின் கீழே சுட்டேன். ஒவ்வொருவருடை கால்களிலும் கைத்துப்பாக்கியின் குண்டு பாயவே இருவரும் கீழே விழுந்துவிட்டார்கள்.

உடனே அபாயமென்று காட்டும் போலீஸ் ஊதுகுழ. லால் ஊதிவிட்டுப் பூமியிலுள்ள கதவைத் துர்க்கிப் பார்த்த போது ராஜாம்பாள் தலைமயிர் மாத்திரம் மேலே தெரி யவும் உடம்பெல்லாம் தண்ணிரில் மூழ்கி யிருக்கவும் கண்டு உடனே அவளை மேலே தூக்கி என் தலையில் வைத்து விசையாகப் பத்துச் சுற்றுகள் சுற்றிவிட்டுப் பார்த்ததில் மெதுவாக மயிரிழைபோல் மூச்சு ஓடிக் கொண்டிருந்தது. அப்பால் வேண்டிய சிகிச்சைகள் செய்து பிராணன் வரும்படி செய்தேன். இதற்குள்ளாகக்

I3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/197&oldid=684739" இலிருந்து மீள்விக்கப்பட்டது