பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலந்த கோகிலம் 125 வீரகன் அடே ஓடி வாருங்கள் சீக்கிரம் ஒடி வாருங்கள் அந்தத் துஷ்டன் எங்கே போன போதிலும் விடக்கூடாது. நீங்கள் கோட்டையின் நான்கு வாசல்களிற்கும் போய் வளைத்துக் கொள் ளுங்கள். அவன் எப்படி நகரை விட்டு வெளியில் போகிறான் பார்க்கலாம். (காவற்காரர்கள் போய் விடுகிறார்கள். இன்னொரு காவல் தலைவன் சந்தானகன் வேறு சிலருடன் இன்னொரு புறமாக வருகிறான்.) சந்தா ஒடுங்கள் ஒடுங்கள் நாம் இராஜ்யத்தை ஒரு நாளும் வேறொருவனுக்கு விடக்கூடாது. வீதிகள், தெருக்கள், சந்துக் கள், தோட்டங்கள் முதலிய எந்த இடத்தையும் பாக்கி விடாமல் தேடுங்கள். அவனைக் கண்டுபிடிப்பவனுக்கு நல்ல சன்மான மும் வாங்கித் தருகிறேன். விர அவன் தனியாக எப்படித் தப்பித்துக் கொண்டு போகக் கூடும். அவனுடைய யாராவது துணைவர் இருந்திருக்க வேண்டும். சந்தா அவன் இராத்திரியே போயிருக்க வேண்டும். இல்லா விட்டால் இதற்குள் மாயமாய்ப் பறந்தா போய்விட்டான். /குணசீலன் வண்டியை ஒட்டிக் கொண்டு வருகிறான்) சந்தா ஆகா! அதோ ஒரு பெட்டி வண்டி போகிறதைப் பார்த்தாயா? அது யாருடையது; எங்கே போகிறதென்று விசாரி. வீர அடே வண்டிக்காரா நிறுத்து. அது யாருடைய வண்டி? உள்ளே இருப்பது யார்? எங்கே ஒட்டிக் கொண்டு போகிறாய்? குண ஐயா! இது மாதவராயருடைய வண்டி! இதற்குள் வஸந்தஸேனை இருக்கிறாள். அவருடைய பங்களாவிற்கு அழைத்துப் போகிறேன். சந்தா சரி! அப்படியானால் போகட்டும். வீர என்ன சோதனை செய்து பார்க்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/127&oldid=887361" இலிருந்து மீள்விக்கப்பட்டது