பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் - 137 தோழ (தனக்குள் ஒரு நாளும் அவ்விதம் நடக்கப் போகிற தில்லை. (வயைந்தஸேனை இருந்தப் பெட்டி வண்டியை ஒட்டிக் கொண்டு பத்மநாபன் வருகிறான்) வீர அடே பத்மநாபா? வந்தாயா? பத்ம ஸ்வாமி வந்தேன். வீர ஏன் வந்தாய்? பத்ம வண்டி கொண்டுவர உத்தரவானதே. வீர எங்கே வண்டி? பத்ம அதிலேதான் உட்கார்ந்திருக்கிறேன். வீர : எருதுகள்? பத்ம இதோ நிற்கின்றனவே. வீர நீ? பத்ம பிரபு நாமெல்லோரும் ஒன்றாய்த் தானே இருக்கி றோம். வீர : அப்படியானால் சந்தோஷம்; ஒட்டு உள்ளே! பத்ம : எந்த வழியில் ஒட்டுகிறது? வீர அதோ தெரிகிறதே இடிந்த சுவர்; அதன் பேரில் ஒட்டு. பத்ம ; அது எப்படி முடியும்? எருதுகளின் உயிர் போய் விடும்; வண்டி ஒடிந்து நொருங்கிப் போம்; என்னுடைய கழுத்தும் முறிந்து போம். வீரர் அந்தக் குட்டிச் சுவருக்கு அவ்வளவு தைரியமா? நான் இராஜாவின் மைத்துனன் என்று உனக்குத் தெரியாது? எருதுகள் செத்தால் வேறு வாங்கிடலாம். பழைய வண்டி ஒடிந்தால் புது வண்டி வருகிறது. உன்னுடைய கழுத்து ஒடிந்தால் வேறொரு கழுத்து வாங்கித் தருகிறேன். பயப்படாதே; ஒட்டு! பத்ம சரிதான். பழையவற்றிற்குப் புதியவை சம்பாதித்து விடலாம். எனக்குப் பதில் என் பெண்சாதி பிள்ளைகள் என்னை எப்படிச் சம்பாதிப்பார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/139&oldid=887388" இலிருந்து மீள்விக்கப்பட்டது