பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் களும் பசுமையாய் இருக்கும் இடத்திலேயே தங்கள் மனத்தைச் செலுத்திச் செல்கிறார்கள். இலாபம் இல்லாத காரியத்தை யார் தாம் செய்வார்கள்? இதில் என்ன குற்றம்? மாத ஆம்! உண்மை தான்; இலாபத்திலும், சுய நலத்திலுமே கண்ணும் கருத்துமாய் இருப்பவருக்கு உற்றார், பெற்றார், அன்பினர், பகைவர் என்னும் பேதமெப்படி உண்டாகும்! கல்லினும் அல்ல எஃகினுங் கடிய அவர் மனது எவ்விதமான பற்றினாலும் இளகுமோ? ஒரு நாளும் இல்லை. ஸோமே ; அவர்கள் விஷயத்தில் நம்முடைய பொருட்களைச் செலவழித்தது போதாதென்று இவ்விதம் நம்முடைய பொழுதை யும் அவர்களைப் பற்றி நினைப்பதில் வீணாக்குவானேன். கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்காகுமோ? தினந் தினம் இதைப் பற்றி ஓயாமல் வருந்தி மனத்தை ஏன் வதைத்துக் கொள்ளுகிறீர்கள்? மாத ஆஹா என்ன செய்வேன்? /சிவலோகநாதனைக்கண்டு’ என்ற பட்டின் வர்ணமெட் வ செஞ்சுருட்டி - ரூபகம் ப. இதுவோ நின் சோதனை? இன்னம் ஏன் இக்கொடுமை? ஈசா! அ. விதிவயம் இதுவாமோ? - பவ விதைகள் அளித்த பயனாகுமோ? (இது) ச. பணமே தெய்வம் பாழுமுலகில்; பாதகங்களைச் செய்யும்; பிணமே தனமில்லாமல், ஏனோ பிறந்தே னில்லாதவன்.(இது) 2. இல்லான் முகமில்லான் முதல் எவரும் விரும்பிப்பாரார்; சொல்லார் மொழி; விலகி நடப்பார், பொல்லாத விஷமெனவே வெறுப்பர். (இது) விசனம் நெருப்பைப் போல என் மனத்தை வேக வைத்து என்னை வதைக்கிறதே ஒழிய, என் தேகத்தை எரித்துச் சாம்ப லாக்காமல் இருக்கிறதே! சே தரித்திரக் கொடுமையினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/24&oldid=887529" இலிருந்து மீள்விக்கப்பட்டது