பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் மாத (செவிகளை மூடிக் கொண்டு) ஆகா! விருத்தம்: மோகனம் என்னசொன் மொழிந்தாய் BTur என்னுயி ரழிந்திட்டாலும் இன்னமு மனைத்து நீங்க இழிதக வெய்திட்டாலும் முன்னுள துறக்க மென்னு முயர்கதி மொழிந்திட்டாலும் சொன்னசொன் மறுப்பதுண்டா? உன்னலும் பாவ மன்றோ! எத்தகைய பாவ மொழிகளைச் சொல்லுகிறாய்! இவ்விதம் பொய் சொல்ல நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். இதனால் என் உயிர் போனாலும் கவலையில்லை. வீடு வீடாய்ப் பிச்சை எடுத்தாயினும் இந்தக் கடனைத் தீர்ப்பேனே யொழியப் பிறரை நான் இவ்விதம் ஒரு நாளும் வஞ்சிக்க மாட்டேன். (பெருத்த விசனத்துடன் ஒரு புறமாகப் போப் விடுகிறார்) ஸோமே : (ஒரு புறமாக ஐயோ! என்ன ஆபத்து வந்து விட்டது! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது சரியாய்ப் போய் விட்டதே! அதோ யார் வருகிறார்கள்? ஒகோ! எஜமானி அம்மாள் வருகிறார்கள் (கோகிலமும் கோமளாவும் வருகிறார்கள்) - கோகி : அடி கோமளா என் பிராணபதி எங்கிருக்கிறார்? அவருடைய திருமேனிக்கு யாதொரு துன்பமும் சம்பவிக்கவில் லையே! அவர் செளக்கியந்தானே? அவருடைய நண்பர் ஸோமேச ருக்கு யாதொரு கெடுதலுமில்லையே? கோமளா தாயே! இருவரும் rேமமே! ஆனால் தாசியி னால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகை மூட்டை மாத்திரம் திருட்டுப் போய்விட்டது. கோகி ஆகா! என்ன ஆச்சரியம்! நகை மூட்டை போய் விட்டதா அவர் தேகத்திற்கு யாதொரு விபத்துமில்லாமல், தப்பித்ததுகூட எனக்கு சந்தோஷமாகத் தோன்றவில்லையே. பிராணனிலும் மானம் அல்லவோ பெரிது அவருக்கு இதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/80&oldid=887648" இலிருந்து மீள்விக்கப்பட்டது