பக்கம்:வரதன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிவேடம் 19 பாது சென்று விடுவான். ஆனால், அன்று அவர்கள் தாக்கு மிக அருகில் வரும்வரையில் வரதன் அவர்களைக் கவனிக்கவே யில்லை. ஏனெனில், அவன் அப்போது, ான் வீட்டினைக் குறித்து எண்ணிக்கொண்டிருந்தான். அர். கரி வேடக்காரர் அவன் அருகே வந்ததும் ஒ' வெனக் கூவி மணியை ஆட்டினர். அப்போதுதான் வர பன் அவர்களைக் கவனித்தான். அவர்கள் கரிவேடக் ாரர் என்பதை அறிந்ததும் அவன், உடல் நடுங்கினன். அவ்வேடக்காரர்கள் மிகுதியும் குடித்து அறிவிழந்து இருந்ததினுல் அவர்களுள் ஒருவன், அச்சிறுவன் வைத்திருந்த, பலகை புத்தகங்களை வாங்கித் தன் கக்கத் தில் வைத்துக்கொண்டான். மற்ருெருவன், அவன் தொப்பியைப் பிடுங்கித் தன் தலையில் அணிந்துகொண் என். அவர்கள் அவ்விதம் புரியும்போது வரதன் சிறி தும் அழவில்லை. அவன் அச்சத்தால் இன்னது செய்வ தென் ..[T]] அறியாது திகைத்து நின்ருன். பின்னர், அக்கரி வேடக்காரர்கள் எங்கோ செல்லலாயினர். அவர்கள், தன் பல ைக புத்தகங்களையும், தொப்பியினையும் கொடுத்து விடுவார்கள் என்று எண்ணி வரதன் அவர் களத் தொடர்ந்து சென்ருன். அவன் நெடுந்துாரம் சென்றும் அவர்கள் அச்சிறுவனுக்கு அவைகளைக் கொடுக்கவேயில்லை. ஆதலின் அவன் மிக்க வருத்தத் தோடு திரும்பிவந்து ஒரு மாடிவீட்டின் தெருக்குறட் டின் மீது அமர்ந்து, ஏதேதோ எண்ணிக் கொண்டிருந் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/26&oldid=891123" இலிருந்து மீள்விக்கப்பட்டது