பக்கம்:வரதன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வரதன் கிைய சுந்தரன் என்பவன் காவல் நிலையத்துக்கு விரைந்து ஒடினன். மணி ஆறும் ஆயிற்று ; அப்போதும் வரதன் வர வில்லை. அவனைத் தேடிச் சென்றவருள் எவரும் அவனைக் கண்டதாகவும் செய்தி கூறவில்லை. காவல் நிலையம் சென்ற சுந்தரனும் சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்து சேர்க் தான். அவனைக் கண்டதும் அங்குள்ள அனைவரும் மிக்க ஆவலோடு, ‘என்ன செய்தி வரதன் அகப்பட் டான 1 என்று கேட்டனர். அதற்குச் சுந்தரன், தான் அங்கே போய் விசாரித்ததாகவும், வரதனைக் குறித்து அவர்களுக்கு யாதும் தெரியவில்லை யென்றும், தான், வரதனின் அங்க அடையாளங்களையும், வீட்டின் முக வரியையும் தெரிவித்திருப்பதாகவும், அவர்கள் அவனை எவ்விதமேனும் கண்டு பிடித்துத் தருவார்களெனவும் யார் என்ன கூறியும் வரதன் தாயும் தந்தையும் சிறி தும் தேறுதல் அடையவில்லை. மணி ஆக ஆக அவர்க ளுக்கு அழையும் துக்கமும் அதிகமாயின. சுந்தரன் உட னுக்குடன் காவல் நிலையத்துக்குப் போவதும் வருவது மாக இருந்தான். மற்றவர்களும் ஒய்வாக இராமல், மேலும் மேலும் தேடியவண்ணமாகவே இருந்தார்கள். மணி ஏழடித்தது ; இரவும் கன்ருக வந்துவிட்டது. எல்லோர் வீட்டிலும் விளக்குகள் வைத்து விட்டார்கள். அப்போதும் வரதன் வந்தபாடில்லை. அவன் அன்னை ஒருபுறம் அழுதவண்ணமாய் இருக்கிருள் தந்தையோ தவிக்கின்ருர். அவர் ஓர் இடத்திலேனும் அமைதியாக ஒரு சிறிது நேரமேனும் அமர்ந்திருக்கவில்லை. அவர் தெருவிற்குப் போவார் ; வீட்டிற்குள் நுழைவார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/53&oldid=891176" இலிருந்து மீள்விக்கப்பட்டது