பக்கம்:வரதன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!){} வரதன் சொல்லிக்கொண்டே அங்கு கின்றிருந்த காவல்நிலையக் காரர்களே அழைத்து வினவினர். அதற்கு அவர்கள், அப்பெரியவர் சொல்லுவது போலவே தாங்களும் எண்ணுவதாகக் கூறினர்கள். ஆதலால், அங்கிருந்தோரது அழுகை யொலியும் சிறிது சிறிதாகக் குறைந்தது. அப்போது, தாமோதரப்பிள்ளைக்கும் சிறிது தைரி யம் பிறந்தது. ஆதலால் அவர், தம் கண்களைத் துடைத்துக்கொண்டு அப்பெரியவரைப் பார்த்து அப்படி யாளுல் என் மகன் இன்னமுமா அகப்படாமல் இருப் பான் !’ என்ருர்.

  • அதற்கு அப்பெரியவர், இது என்ன ஆச்சாரியம் ? என் மைத்துனன் சோமசுந்தரன் மிகச் சிறுவனுக இருக்கும்போது ஒருமுறை காணுமற்போய் மூன்று .நாட்கள் கழித்தல்லவா அகப்பட்டான் ! அப்போது இந்தப் போலீசார்களே அவனைக் கண்டுபிடித்துக் கொடுத்தார்கள் ? -ஏன் ? இவ்வளவுதான-பிள்ளைகள் காணுமற் போவதையும், பிறகு ஒருவாரம், இரண்டு வாரம் கழித்துக்கூட அகப்படுவதையும் நான் பத்திரிகை யில் எத்தனையோ முறை படித்திருக்கிறேன். உங்களுக்கு இவன் ஒரு பிள்ளையாக இருப்பதல்ை இப்படி அச்சப் படுகின்றீர்கள் ! நீங்கள் சிறிதும் அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்கமாட்டார் என்ருர்.

அப்பெரியவர் சொல்லுக்கு அப்போது பெரிதும் மதிப்பே இருந்தது. ஆதலால், அங்குள்ள ஆண்களும் பெண்களும் அவர் பேச்சினையே ஆதரித்துப் பேசினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/63&oldid=891198" இலிருந்து மீள்விக்கப்பட்டது