பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் " சினிமா உலகம்’ தனக்கெனத் தனி வரலாறு கொண்டிருந்தது "சினிமா உலகம்' பத்திரிகை. தமிழின் முதலாவது சினிமாப் பத்திரிகை என்று அது பெருமையுடன் அறிவிப்பது வழக்கம். பல வருடகாலம் சென்னை யிலிருந்து வெளி வந்த அந்தமாதம் இரு முறை வெளி பீடுயுத்த காலத்தில் கோயம்புத்துTர் சேர்ந்திருந்தது. தினமணி'யில் பணிபுரிந்து விட்டு வி ல கி, ஹனுமான் வார இதழில் சிறிது காலம் சேவை புரிந்து பின் சினிமாத் துறையில் பிரவேசித்து திரைக் கதை வசனம் எழுதுவதில் தனித் திறமை காட்டிப் பிரகாசித்த இளங்கோவன்’ (ம. க. தணிகாசலம்) அந்தப் பத்திரிகையில் கொஞ்ச காலம் தொண் டாற்றியிருந்தார். கவி ச. து. சு. யோகியாரும் (ச. து. சுப்பிரமணிய யோகி) அதில் பணி செய்திருந் தார். பெயர் பெற்ற வேறு சிலரும் கூட. "சினிமா உலகம் வெறும் சினிமாக்கலை தகவல்விமர்சன இதழாக மட்டுமே நடந்ததில்லை. கதை, கவிதை, ரசமான கட்டுரைகள் வெளியிடும் பத்திரிகை யாகவும் இருந்தது. சினிமா உலகம் சம்பந்தமான விறுவிறுப்பான விஷயங்களையும் விவாதங்களையும் அவ்வப்போது அது வெளியிட்டு வந்தது. 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன்’ இதழ்களில் சினிமாப் படங்கள் பற்றி கிண்டல் கலந்த விமர்சனங்கள் எழுதி வந்தார். அவர் எழுதிய தியாக பூமி” நாவல் டைரக்டர் சுப்ரமணியத் தால் படமாக்கப் பட்டது. பாபநாசம் சிவன், எஸ். டி. சுப்புலட்சுமி முதலியவர்கள் நடித்தார்கள். அது படமாக வளர்ந்து வந்த போதே, நாவல் தொடர்கதையாக விகடன் பத்திரிகையில் பிரசுரம்