பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 35 நவசக்தி ஆபீசில் புத்தகங்கள் அதிகம் இருந்த தில்லை. ஆனாலும், சென்னை யுனிவர்சிட்டி லைபிரரி யிலிருந்து புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பதற்கு கே. ராமநாதன் உதவினார். டாஸ்டாவ்ஸ்கி, ஜவான் துர்கனேவ், டால் ஸ்டாய் போன்ற ரஷ்ய எழுத்தாளர்களின் நாவல்களையும், மற்றும் பல தேசச் சிறுகதைத் தொகுப்புகளையும் அப்படி எடுத்து வந்து படிக்க வாய்ப்பு கிட்டியது. லைபிரரிக்குப் போய் திரும்புகிற போது, திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் இருந்த அ. கி. ஜயராமனின் ஜோதி நிலையம் போவேன். அவர் என்னிடம் பிரியமாகப் பழகினார். நான் சினிமா உலகம் பத்திரிகையில் பணிபுரிந்த போதே பி. எஸ். செட்டியார் மூலம் அவர் என்னைப் பற்றி அறிந்திருந்தார். - ஜோதி நிலையம் நல்ல நல்ல மறுமலர்ச்சி இ லக் கி ய து ல் க ைள .ெ வ எளி யி ட் ட து. க. நா. சுப்ரமண்யத்தின் முதல் நாவல் பசி அந்தச் சமயம் வெளி வந்திருந்தது. சர்வதேசக் கதை மலர் கள்’ என்ற வரிசையில் பல்வேறு நாடுகளின் நல்ல சிறுகதைகளை மொழி பெயர்த்துப் பிரசுரித்து வந்தது. அ. கி. ஜ. அவற்றை எல்லாம் எனக்கு அன்பளிப் பாகவே தந்தார். பிற்காலத்திலும் ஜோதி நிலைய வெளியீடுகளை அன்புடன் அவர் எனக்கு அளித்துக் கொண்டிருந்தார். - - ந. சிதம்பரசுப்ரமண்யம், ப. ராமஸ்வாமி (ப. ரா.), ரா. ஆறுமுகம் போன்ற எழுத்தாளர்களை ஜோதி நிலையத்தில் அறிமுகம் செய்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் வாய்த்தன.