பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் முக்கிய விஷயம் மயிலாப்பூர் அல்லயன்ஸ் கம்பெனி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல சேவை செய்திருக்கிறது. சிறுகதை இயக்கியத்துக்கு அது புரிந்துள்ள பணிக் காக அதன் அதிபர் குப்புஸ்வாமி ஐயரை எவ்வளவு பார் டடினாலும் தகும். தமிழ் நாட்டுச் சிறு கதைகள்’ என்ற வரிசையில் அல்லயன்ஸ் வெளியீடுகளாக அவர் அருமையான கதைத் தொகுதிகளை வெளியிட்டார். வ. வெ. சு. ஐயசின் மங்கையர்க்கரசி முதலிய கதைகள்', ராஜாஜி குட்டிக் கதைகள், கு. ப. ராஜகோபாலன் கனகாம் பரம் முதலிய கதைகள்', ந. சிதம்பரசுப்ரமண்யனின் "சக்கரவாகம்’, த, நா. குமாரஸ்வாமியின் 'கன்யா குமரி. க. நா. சுப்ரமண்யம் அழகி முதலிய தொகுதி கள் இந்த வரிசையில் பிரசுரமாயின. தமிழ்ப் பத்திரிகைகளில் வெளி வந்த கதைகளில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து கதைக் கோவை' என்ற தொகுப்பாக அல்லயன்ஸ் கம்பெனி வெளி யிட்டது. முதல் கோவையில் 40 கதைகள் இருந்தன. அடுத்து, அறுபது கதைகளைத் தொகுத்து இரண்டாவது கதைக் கோவை பிரசுரமாயிற்று. அதில் எனது சதையும் இடம் பெற்றிருந்தது. மூன்றாவது கதைக் கோவையையும் அந்தக் கம்பெனி பிரசுரித்தது. அதன் பிறகு அப்படிப்பட்ட தொகுப்புகள் வெளிவரவில்லை. - அல்லயன்ஸ் கம்பெனியார் தொகுத்து வெளி யிட்ட கதைக் கோவைகளில் எல்லாமே சிறந்த கதை களாக இருந்தன என்று சொல்வதற்கில் லை.