பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட் டங்கள் 47 ஊழியனில் அவருடைய யாப்பில்லாக் கவிதை' களும் மன நிழல் கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. கு. ப. ரா. வின் மரணத்துக்குப் பிறகு, கும்ப கோணம் எழுத்தாளர்கள் ஊழியனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. ஊழியனில் எழுதுகிறவர்களுக்கு சன்மானம் வாங்கித் தருவதாக கு. ப. ரா. சொல்லி யிருந்தது போல், தங்களுக்கு அன்பளிப்பு எதுவும் கிடைக்கவில்லையே என்ற மனக்குறை அவர்களுக்கு இருந்திருக்கும். இதுவரை கு. ப. ரா. வுக்காக எழுதி னோம்; இனியும் எதற்காக ஊழியனுக்கு எழுத வேண்டும் என்று அவர்கள் எண்ணியிருக்கலாம். ஏனோ, சிறிது சிறிதாக அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். எனினும், எம். வி. வெங்கட்ராம் தொடர்ந்து எழுதி உதவினார். கதைகள், விக்ரகவிநாசன் என்ற பெயரில் கவிதைகள், மற்றும் சரத் சந்திரர் பெண் களையும் பெண்மையையும் பற்றி, சமூகத்தில் பெண் கள் நிலை குறித்து எழுதிய நீண்ட கட்டுரையின் மொழிபெயர்ப்பு எல்லாம் தந்தார். தபாலில் வரும் கதை கட்டுரைகள் தரமாக இருப்ப தில்லை. நல்ல விஷயங்கள் அபூர்வமாகவே வந்து சேரும். பத்திரிகை மாதம் இருமுறை வெளி வந்தாக வேண்டும். நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கவும் வேண்டும். ஆகவே, தான் நிறையவே எழுதினேன். கவிதைகள் திருலோக சீதாராம் (மந்த ஹாசன்), கலைவாணன், வித்துவான் வி. துரைசுவாமி, மற்றும் இலங்கைக் கவிஞர்கள் எழுதினார்கள். அ. வெ. ர. கி. யும் கண்ணன் என்ற பெயரில் எழுதினார்,