பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் | 49 நகைச்சுவைக் கட்டுரை-இவை சிறப்பான படைப்பு களாக விளங்கின. மற்றும் பல நல்ல கதைகள் கட்டுரைகளும் இருந்தன. இவற்றை அணி செய்யும் அழகிய சித்திரங்களும், வேறு ஒவியங்களும் அம்மலரின் மதிப்பை உயர்த்தின. அதுபோல் சிறப்பான முறையில் கிராம ஊழியன் மலர் இருக்க வேண்டும் என்று விரும்பி னேன். ஒவியங்கள், கதைகள் கட்டுரைகளுக்கு எடுப் பான படங்கள் இணைப்பது சாத்தியமில்லை; பொருள்நிலை இடம் தராது. அந்தக் குறையை விஷயச் சிறப்பின் மூலம் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணி, எல்லோருக்கும் கடிதங்கள் அனுப்பினோம். தமிழ் பத்திரிகைகள் இலங்கை எழுத்தாளர் களுக்கு உரிய கவனிப்பு தருவதில்லை, பொதுவாக, கிராம ஊழியன்’ தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கு மிடையே ஒரு இலக்கியப் பாலம் ஆகச் செயல்பட்டது. ஆண்டு மலரிலும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்தோம். எங்கள் முயற்சி வெற்றி தந்தது. ஆண்டு மலர் அருமையான வெளியீடு ஆக மலர்ந்தது. பாரதிக்குப் பின் வந்த முதல் தலைமுறைத் கவிஞர்கள் அனைவரும்-பாரதிதாசன், ச. து. சு. யோகியார், தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. சுத்தானந்த பாரதியார்அம்மலரில் கவிதை எழுதியிருந்தனர். ந. பிச்சமூர்த்தியின் மகாகவிகள் பிரசுரமா யிற்று. கலைவாணன், சாலிவாகனன், மந்த ஹாசன் கவிதைகள் இருந்தன.