பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அருள் பெற்ற அடிகளார்) & - - - Tென்ன, ஜோதிகள் அதிகாலையிலேயே எங்கே கிளம்பிவிட்டது? என்று கேட்டார் நடுத்தெரு நாராயணன், நீராடி, விபூதியைப் பட்டை பட்டையாகப் பூசிக்கொண்டு சிவப்பழமாக காட்சியளித்தவர் தான் ஜோதிகள்’ எனும் அழைப்புக்கு இலக்கானவர். அவர் பெயர் ராமலிங்கம், பக்தி அதிகம் உடையவர். ஆகவே வள்ளலார் என்று குறிப்பிடப்படும் ஜோதி ராமலிங்கம்' போல் தான் இருவரும் என்று ஊரார்கள் கேலியாய் சொல்வது உண்டு. அதனால் இவரையும் ஜோதி ஜோதிகள் என்றே கூறிவந்தார்கள். பக்த ரும் அதை ஆட்சேபிக்கவில்லை. நாராயணனின் வீடு நடுத்தெருவில் இருந்தது. எனினும் அவர் பெரும்பாலான நேரம் தெருவில் சந்தியில் நின்று, போகிறவர் வருகிறவர்களோடு வாயாடி மகிழ்வதைக் காணமுடியும். இதனால் அவருக்கு நடுத்தெரு நாராயணன் என்கிற பெயர் முற்றிலும் பொருத்தமாக இருந்தது. நாராயணன் கேட்ட கேள்விக்கு சிரித்தபடியே பதில் சொன்னார், ராமலிங்கம். 'நம்ம அம்பலவாண பிள்ளை வீட்டுக்கு ஒரு சாமியார் வந்திருக்கிறார். அவரை தரிசித்து வரலாமே என்றுதான் போகிறேன்.' - 'அம்பலம் பிள்ளை வீட்டுக்கு என்னக்கி தான் பண்டாரமும் பரதேசியும் வராமல் இருக்காங்க? யாராவது அமாவாசைச்சாமி, பெளர்ணமிச்சாமியின்னு சொல்லி வந்து, மூக்குமுட்ட ஒரு புடி புடிச்சு விட்டுத்தான் போறான். நம்ம நாட்டிலே தான் சாமிகளுக்கும் சாமியார்களுக்கும் பஞ்சமே இல்லையே! என்று ஓங்கி அடித்தார் நாவன்னா.