பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபரீத ŚಹEಿ] & 192 நான் அன்றைக்கே திசத்தைச் சொல்லியிருப்பேனே! என்று புலம்பினான். அவனுடைய மனம் அவனைக் குறை கூறிக் கொண்டிருந்தது. 'பெரிய பிள்ளை தன்னுடைய மனப்பிராந்திக்குத் தானே பலியாகிவிட்டால் அதுக்கு யார் பொறுப்பு? என்றான் சிவசைலம். அப்படிப்பட்ட நிலைமையை உண்டாக்கியது நாம் 5Tರ್ಡಿಕT ? கறுப்புப்பூனை உயிரோடு அலைகிறபோதே செத்துப்போச்சு என்று அவரை நம்பவைத்தோம். அதற்காக ஒரு வார காலம் அதை மறைத்துவைத்திருந்தோம். பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது நம் கண்களில் படவேயில்லை என்று சாதித்தோம். நமது நடிப்பு மிகப் பிரமாதமாக அமைந்துவிட்டது. பிறர் பார்வையில் படாத பூனை தனது பார்வையில் மட்டும்தான் படுகிறது என்று ஆகிறபோது அதில் ஏதோ விபரீதம் இருக்கிறது என்று குழம்புவது மனித சுபாவதம் தானே? என மூக்கையா விவரித்தான் மாடசாமியின் உள்ளத்தில் மட்டும் வேதனை குத்திக் குடைந்துகொண்டுதாணிருந்தது.