பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 & | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் என்பதை அவள் புரிந்து கொண்டிருந்தபோதிலும், ஒரு தடவைகடத் திரும்பிப்பார்க்கவில்லை. தனது நடையில் மாறுதல் எதுவும் சேர்க்கவுமில்லை. அவள் தன் சுபாவப்படி மெதுவாக நடந்துபோய்க் கொண்டிருந்தாள். விஸ்வநாதனும் தனது அவசர அலுவலைக் கவனிக்க விரைந்தான். எவருடைய அபிப்பிராயமும் எந்நேரத்திலும் ஒரே தன்மையில் இருப்பதில்லை, சூழ்நிலை, சந்தர்ப்பம் முதலிய புறக் காரணங்களுக்குத் தகுந்தபடி மாறுகிறது. அந்த யுவதி நல்லவள் என்று அவன் காலையில் கொண்ட அபிப்பிராயத்தை அவனே மாலையில் மாற்றிக் கொண்டான்! சே, இவளைப் போய் நல்லவள் என்று பாராட்டினேனே நான் இவள் மகா தலைக்கணம் என்றல்லவா தோன்றுகிறது என்று எண்ணினான் அவன். அவ்வாறு அவன் எண்ணுவதற்குக் காரணம் இல்லாமல் போகவில்லை. பஸ் நிற்கும் இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். ஒரு தூணில்சாய்ந்தவாறு நின்றிருந்த அவனை, அப்போது அங்கே வந்த பெண்கள் கவனிக்கவில்லை என்றே தோன்றியது. மூன்று பெண்கள் வந்தார்கள். வரும்பொழுதே வம்பளந்து சிரித்துமகிழ்ந்து நடந்தார்கள். ஒருத்தியை இரண்டு பேர் கேலி செய்து களித்ததாகத் தெரிந்தது. அவர்கள் பேச்சு விஸ்வநாதன் காதில் நன்றாக விழுந்தது. "பின்னே என்னடி வத்ஸலா! உனக்கு அவன் பேரிலே பிரியம் ஏற்படவில்லைன்னு சொன்னால், நீ ஏன் அவனுக்காக இரக்கப்படனும்: அவன் யாரு? அவனுக்காக நீ ஏன் ஒன்றரையனா கொடுக்கணும்? "பிரியம்னு சாதாரணமாகச் சொல்றியே லலி! வெறும் பிரியமா அது காதல்! இல்லையா வத்ஸல்” என்று