பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(சுதந்திரதாகம்) கிெலாசம் தன் குமாஸ்தா வேலையை விட்டு விட்டான். அதற்குக் காரணமே தன்னுள் வளர்ந்து வருகிற சுதந்திர உணர்வுதான் என்று அவன் சொன்னான். 'உத்தியோகம் என்ன உத்தியோகம்! இன்னொருவன் சொல்கிறபடி எல்லாம் கேட்டு நடக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய தனித்துவத்தை நாமே இழந்து விட வகை செய்கிறது. அது. அது எனக்குப் பிடிக்கவில்லை. இனிமேல் நான் சுதந்திரமாக ஏதாவது முயற்சிகளில் ஈடுபடப் போகிறேன்' என்று அவன் அறிவித்தான். அவன் செயலை அறிந்த பெரியவர்களும், அவனுடைய பேச்சைக் கேட்க நேர்ந்தவர்களும், 'பிழைக்கத் தெரியாதவன் அவன்! என்று தான் எண்ணினார்கள். அவன் நலனில் அக்கறை கொண்டிருந்த ஒரு சிலர் வேறு நல்ல வேலை ஏதாவது பார்த்துத் தரட்டுமா? என்று அவனிடம் கேட்டார்கள். நீங்கள் எனக்காகச் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நான் வேலை பார்க்க விரும்பவே இல்லை என்று அவன் திடமாகக் கூறினான். ‘புத்தகங்கள் படிப்பது, நினைத்ததை எழுதுவது, இஷ்டம் போல் சுற்றுவது-இப்படி சுதந்திரமாக வாழ்க்கை நடத்தப் போகிறேன் என்று கைலாசம் தெரிவித்தான். - சரி. இனிமேல் அவன் உருப்படப் போவதில்லை! என மற்றவர்கள் கை கழுவிவிட்டார்கள். அதனால் கைலாசம் தன் உள்ளத்தில் எழுந்த சுதந்திர தாகம் தணிந்து விடாதபடி பாதுகாத்து வருவதற்குப் போதுமான வாய்ப்புகளும் வசதிகளும் பெற முடிந்தது.