பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ु] ** 6 சோக சரித்திரத்தை அந்தி வெயில் எடுத்துக்காட்டுகிறது. அழகியின் அமைதியுறாத ஆவி அதைக் கண்டு குமைகிறது. தற்கால மனிதன் ஒருவனுக்கு தன் சோக அனுபவத்தை விவரிக்கிறது. இந்த அபூதக் கதையை சூப்பர் நேச்சுரல் ஸ்டோரி வெற்றியின் தோல்வி எனும் சொல் சித்திரம் மூலம் அறியலாம். கவிதை வாழ்வு வேறு ரகமான சுவாரசியக் கதை. அதன் நாயகர் கிருஷ்ணபிள்ளை விந்தைக் குணமுடைய ரசமான மனிதர். 'இன்ட்டரஸ்டிங் கோக்டர். அவரது மன இயல்புகளையும் தனிரகமான போக்குகளையும். கவிதை எதுவும் எழுதாத கவிஞராய், வாழ்க்கையையே கவிதையாக வாழ்ந்து சுவைத்த ரசிகராய் அவர் விளங்குவதையும் இந்தக் கதை சித்திரிக்கிறது. ஆச்சியின் தோல்வி கதையில் மனித மனசின் வேறு ரகமான செயல்பாட்டை கண்டறியலாம். ஒரு கிராமத்து முதியவனின் மன ஆசைகளையும் உணர்ச்சி நாடகங்களையும், கிராமத்தின் முடிசூடா ராணியாக ஒரு கலையில் பிரகாசித்துக் கொண்டிருந்த அவளை மற்றொரு முதியவள் தலைகுணிய வைத்ததையும் இக்கதை பதிவு செய்துள்ளது. அருள் பெற்ற அடிகளார் பக்தி பண்ணிப் பெயரும் புகழும் பெற்றுத் திகழ்ந்த ஒரு சாமியாரின் போலித்தனத்தையும் பொய்மை வாழ்வையும் அறிய நேர்ந்த, அடியார் ஒருவரின் மனநிலையை விவரிக்கும் கதை ஆகும். அடிகளாரையும் அவரது அடியாரையும் கிண்டல் செய்து மகிழும் இயல்புடைய நடுத்தெரு நாராயணன் கதைக்கு சுவை சேர்க்கிறார். இதர கதைகள் ஆறும் பல்வேறு இயல்புகள் கொண்ட சுந்தான்கள்-சுந்தரிபார்களின் இயல்புகளையும், அவர்களிடையே ஏற்படும் சந்திப்புகள், தொடர்புகள், உறவு வளர்ச்சிகளையும் உணர்வோடும் உயிர்ப்போடும் விவரிக்கும் ரசமான கதைகளாகும். இளைஞன்கள் இளைஞகளின் முதல் சந்திப்புகள், மனச்சலனங்கள், வளரும் உணர்ச்சி நாடகங்ள் முதலியவற்றை இக்கதைகள்