பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வின் ரசிகன்

வீணப்பெருமகன். எத்தன். அயோக் கியன். காமக்கலை வல்லான் என்றெல்லாம் புகழ் பாடப்பட வேண்டிய தகுதிகளைப் பெற்றிருந்த காஸனோவா வரலாற்றிலும் இலக்கியத்திலும் அழியாப் புகழ் பெற்றதற்குக் காரணம் அவன் தனது சுயசரிதையை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி வைத்ததுதான். அவன் உல்லாசவாழ்வு வாழ்ந்து தீர்த்தபின் வாழ்வில் வெற்றிகளும் தோல்விகளும் அனுப வித்த பிறகு, முதுமையில் பொழுதுபோகா மலும் செய்வதற்கு எதுவும் இல்லாமலும் அவதிப்பட்ட காலத்தில், தனது கடந்த காலத்தைப் பற்றி அதிகம் எண்ணினான். அவற்றை எல்லாம் எழுதி வைத்தால் பொழுதும் போகும். செயல்திறம் இழந்து செல்லரிக்கும் நெஞ்சுக்கு இதமாகவும் இருக்கும் என்று கருதினான். எழுதினான். பதினாறு வால்யூம்கள் எழுதி வைத்தான். -

காஸனோவா சிறந்த எழுத்தாளன் அல்ல. கவிதை நயத்தோடு விஷயங்களைச் சித்திரிக்கும் ஆற்றல் பெற்ற கலைஞனும் அல்ல. ஆனால் அவன் வாழ்க்கையை மிக நன்றாகச் சுவைத்திருந்தான். அவ்அனுபவங்களை அப்படி அப்படியே எழுதிவைத்தான். அவை