பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வல்லிக்கண்ணன்

முதலியவற்றைக் கொண்ட ஜிலுஜிலு சிருஷ்டிகளாக இருக்கும். (கல்கி டுமாஸ் வழியைப் பின்பற்றினார் என்று கூறலாம்)

காலப்போக்கில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வலுப் பெற்று வந்தது. அது வடவர் எதிர்ப்பை வளர்த்தது. ராஜபுத்திர வீரத்தையும் மராட்டியவிரர் பெருமையையும் போற்றிப் புகழ் வதை விடுத்து, தமிழ்மன்னர்களின் - முக்கியமாக சோழப் பேரரசர்களின் - கீர்த்திகளை எடுத்துரைப்பதில் திராவிடத் தலைவர்கள் ஆர்வம்கொண்டார்கள். சோழ மன்னரின் வட நாட்டுப்படையெடுப்பும், இமயத்தில் தமிழ்க்கொடி பொறிக்கப் பட்டதும், திமிர்பிடித்த வடநாட்டு மன்னர்களான கனகவிசயர் தலைமீது கல் ஏற்றிக்கொண்டு வந்ததும் மேடைகளிலும் ஏடு களிலும் முழக்கமிடப்பட்டன. தமிழ் மாமன்னரின் பொற்காலப் பெருமைகள் எடுத்துச் சொல்லப்பட்டன.

தமிழர்கள் தமிழ் மன்னர்களின் கீர்த்திகளை உணரலா 金雳了序、荔.

அந்நியர் ஆட்சியை எதிர்ப்பதற்கும், தமிழரின் தமிழ் உணர் வையும் தமிழர்மாண்பையும் வலியுறுத்துவதற்கும் சோழ சக்கர வர்த்திகளின் வரலாற்றுப்புகழையும் சரித்திர சாதனைகளையும் சாகசங்களையும் சுவையான நாவல்களாகப் புனைவது பொருத்த மாக இருக்கும், மக்களிடையே அவை நல்ல வரவேற்பைப் பெறும் என்ற எண்ணம் கல்கிக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் பார்த்திபன் கனவு படைத்தார். தொடர்ந்து சிவகாமியின்சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய பெரிய பெரிய நாவல்களை எழுதினார்.

அவை வாசகர்களைக் கவர்ந்தன. வாசகர்களின் எண்ணிக் கையை அதிகப்படுத்தி, பத்திரிகையின் விற்பனையைப் பெருக்கு வதற்கும் உதவின.

சரித்திரம் என்பது மன்னர்கள் பற்றியும் அவர்கள் நடத்திய போர்களைப் பற்றியும விவரிப்பது என்றே வெகுகாலம் வரை நம்பப்பட்டு வந்திருக்கிறது.

அரண்மனை ரகசியங்களையும், மன்னர்கள் மற்றும் அரண்மனை சார்ந்த முக்கியஸ்தர்களின் போட்டி - பொறாமைகள், சூழ்ச்சிகள், சதித்திட்டங்கள், து மகளிரின் காதல் அல்லது காமஈடுபாடுகளை வர்ணிப்பதும் வரலாற்றின் வேலையாகும் என்ற எண்ணமும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

இந்த அடிப்படையில்தான் சரித்திரக் கற்பனைகள் புனை வோரும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் - வருகிறார்கள்.

இவை மட்டுமே சரித்திரம் ஆகா. நாட்டுமக்களின் வாழ்க்கை யையும், மன்னர்களின் போக்குகள் மற்றும் ஆட்சி முறைகளினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், அந்தந்த காலகட்டத்திய