பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

售兹 வல்லிக்கண்ணன்

போராட்டத்தில் குதித்தவர்களின் பிற்கால நிலையையும் இந்த நாவல் விவரித்துள்ளது.

ந. சிதம்பரசுப்ரமணியன் எழுதிய ‘மண்ணில் தெரியுது வானம் விடுதலைப்போராட்ட காலத்திய நிகழ்ச்சிகளைக் கூறினாலும், அது சமூக வரலாற்று நாவலாக எழுதப்படவில்லை என்றே சொல்லவேண்டும். அரசு உத்தியோகம் பார்க்கிற ஒரு தந்தை தன் மகனைப்பற்றிக் கண்ட கனவுகளையும், மகன் அவற்றுக்கு மாறாகத் தேசீயஉணர்வோடு விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுவிடுவதையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்த நாவல் வர்ணித்துள்ளது.

நா. பார்த்தசாரதியின் ஆத்மாவின் ராகங்கள் விடுதலைப் போராட்ட காலச் சூழ்நிலையையும், நிகழ்வுகளையும் அடிப்படை யாக்கி ஒரு நாவல் எழுதப்பட வேண்டும் என்ற ஆர்வத்தின் மலர்ச்சியாக இருந்தபோதிலும் ஒரு காந்தியவாதியையும் அவர்மீது காதல் கொள்ளும் ஒரு தாசி குலப்பெண்ணின் உணர்வுகளையும் ரசமாக விவரிக்கும், ரொமான்டிக் நாவலாகவே அமைந்துள்ளது. சமீபகாலத்தில் வெளிவந்துள்ள சமூக வரலாற்று நாவல்கள் சில பாராட்டப்பட வேண்டிய படைப்புகள் ஆகும். - பொன்னிலன் எழுதியுள்ள புதிய தரிசனங்கள் இவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது. இது அரசியல் நாவலின் தன்மையையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அமுலுக்கு வந்த அவசர காலச்சட்டம், அதனால் அரசியல் கட்சிகளிடத்தும், மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட பாதிப்புகள் முதலியன இந்த நாவலில் விரிவாகவும் உணர்ச்சியோடும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

அடுத்தது, செ. யோகநாதன் மிக விரிவாக எழுதத் திட்ட மிட்டுள்ள அசுரவித்து' எனும் பெரிய நாவலின் முதல் பகுதியாக வெளியிட்டிருக்கும், நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ என்பது யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும், கிராமப்புற மக்களின் உணர்வுகளையும் அவர்களது வாழ்க்கை முறைகளையும் கலைத் தன்மையுடன் விவரிக்கிறது. இது.

கவிஞர் தமிழ்நாடன் எழுதியுள்ள சாரா நாவல் வரலாற்றுப் பார்வையும், சமூக நோக்கும், உலகம் தழுவிய விசாலமான சிந்தனையும் கொண்ட புதியதோர் முயற்சியாகும். பண்பாட்டுப் பெருமையும் இனஉணர்வும் பேசுகிற மக்களின் வெறித்தன இயல்பு களையும், அவை விளைவிக்கிற பாதிப்புகளையும் எடுத்துச் சொல்கிற இந்த நாவல், ஆரம்பத்தில் சிந்தனைக்கனமும், வளர வளர காதல் சுவாரஸ்யமும், பிற்பகுதியில் மர்மநாவலின் விறு விறுப்பும் பெற்றுள்ள படைப்பாக இருக்கிறது. தமிழ் நாவலில் புதிய களம், புதிய கரு, புதிய போக்கும் நோக்கும் சேர்த்திருப் பதற்காக, கவிஞர் தமிழ் நாடனை பாராட்ட வேண்டும்.