பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துரும்புக்கு ஒரு துரும்பு 189

மெதுவாக நகரும் எளிய நாய் மாதிரி, அவன் கெஞ்சல் பார்வையை 'முதலாளி' பக்கம் பதித்தபடி மெதுவாக நகர்வான். எதுவும் பெயராது என்று புரிந்தவுடன் வேகமாகப் போவான்.

என்றாலும், அடுத்த முறையும் அவர்கள் 'எலே ரங்கா வாறியாடா? ஒரு சுமைகொண்டு போகனும்’ என்று கூப்பிடத்தான் செய்வார்கள். அவனும் 'சரி முதலாளி' என்று போகத் தான் செய்வான். அவன் கெஞ்சுவதும், அவர்கள் சீற்றம் கொள்வதும் வழக்கம்போல் நடைபெறத்தான் செய்யும்.

அவன் தோற்றமே அவன் ஏமாற்றப்படத் தகுந்தவன் - எளிதில் ஏமாறுவதற்குச் சித்தமாக இருப்பவன் - என்ற எண்ணத்தை மற்றவர்கள் மனசில் எழுப்பக்கூடியதாக இருந்தது. சில கடைக்காரர்கள் 'அப்பிராணிப் பய' என்று இளக்காரமாகக் குறிப்பிடுவார்கள்:

அதற்காக யாரும் அவனிடம் அனுதாபம் காட்டுவதில்லை. கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்குவார்கள் பலர். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்,

சின்னப்பிள்ளைகள் கூட அவனைப் பரிகசிப்பது வழக்கம், 'ஏ ரங்கா - குரங்கா' என்று கூப்பிடுவார்கள். 'கோனக் கழுத்துக் குரங்கா! கூனல்முதுகுக் குரங்கா!' என்றெல்லாம் கத்துவார்கள்.

சிலர் பின்னாலிருந்து சிறுசிறு கற்களை அவன்மீது விட்டெறிவார்கள். அவன் கோபமாகத் திரும்பிப் பார்ப்பான், 'டேய் டப்ஸாக் கண்ணுக் குரங்கா! ஒடிவந்து பிடிடா பார்ப்போம்' என்று கத்துவார்கள்.

'சிறுக்கி புள்ளெகளா! தேவ்டியா புள்ளெகளா! நீங்க வாந்திபேதியிலே போக!' என்று ஏசிக்கொண்டு அவனும் ஒரு கல்லை எடுத்து வீசி எறிவான்.

அது எவர்மீதும் படாது.

அவர்கள் கைகொட்டிக் கெக்கலிப்பார்கள். 'டோடோய்! சுமை தூக்குற கழுதை! பாரவண்டிக் கழுதை! கோவேறு கழுதை!’ என்று கோரஸ் பாடுவார்கள்.

ரங்கனுக்கு ஆத்திரமும் கோபமும் பொங்கிவரும். ஆனாலும், அவனால் எதுவும் செய்ய இயலாது. பொட்டைக் கோபத்தோடு, வாயில் வந்தபடி ஏசுவான். அவ்வளவுதான் அவனால் செய்யக் கூடும். .

விறகுக்கடை ஒன்றில் அவன் ஏவல்புரிவது உண்டு. வாடிக்கைக்காரர்கள் 'அரை எடை விறகு' அல்லது 'ஒரு எடை