பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218 வல்லிக்கண்ணன் கதைகள்

பரமசிவம் திடுக்கிட்டார் 'சுந்தரமா? அப்படி ஒருத்தி எனக்குத் தெரியாமல் என் வீட்டுக்கு வந்து...' என்று உணர்ச்சி வேகத்தோடு பேசத் தொடங்கி, தொடர முடியாது திணறினார்.

'உங்க பிரண்டு உங்க வீட்டுக்கு வருகிற உரிமை திடீர்னு இல்லாமல் போய் விடுமா? நீ என்னை தேடிஎன் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு நீங்க உங்க பிரண்டை எச்சரித்து வைத்தீங்களா? என்று நண்பர் கேட்டார்.

நிலைமை மிகவும் விபரீதமாக முற்றுகிறதே என்று குழம்பிய பரமசிவம் தலையைச் சொறிந்தார். அவர் மனைவி பத்திரகாளி போல் முன்னே பாய்ந்தாள்.

'இப்ப ஏன் வாயடைச்சுப் போச்சு? வாயிலே ஈர மண்ணையா திணிச்சு வச்சிருக்கு? என்கிட்டே மட்டும் வாயடி அடிச்சிகளே' என்று வெடித்தாள்.

'சத்தியமாக எனக்கு சுந்தரம் என்று யாரையும் தெரியாது’ என்று அவர் அழமாட்டாக் குறையாக முணுமுணுத்தார்.

'கள்ளச்சத்தியம் பண்ணாதீங்க அண்ணாச்சி!' என்று ஒரு நண்பர் முன் வந்தார். ‘என்னை உங்களுக்குத் தெரியாது? நான் சுந்தரம் இல்லையா?’ என்றார்.

'சுந்தரம் என்கிற பெண் எவளையுமே எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். இதிலே ஏதோ சூது இருக்குது...'

'இன்னும் தமாஷ் பண்ணி நெருக்கடியை வளர்க்க வேண்டாம். உண்மையை சொல்லிப் போடுவோம்’ என்று ஒருவர் தீர்மானம் கொண்டு வந்தார். மற்றவர்கள் அதை அங்கீகரித்தார்கள். விஷயத்தை அம்பலப்படுத்தினார்கள்.

பரமசிவம் எல்லோரையும் கிண்டல் செய்து ஜாலி பண்ணிய படி இருக்கிறாரே, அவரையே ஒருசமயம் நாம் 'கோட்டா பண்ணினால் என்ன என்று அவர்கள் நினைத்தார்களாம். அதனால், நண்பர் சுந்தரம் பெண் வேஷம் போட்டுக் கொண்டு பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து விளையாட்டு காட்டினார். அவர் அமெச்சூர் நாடகங்களில் பெண் வேடம் தாங்கிச் சிறப்பாக நடிக்கும் பழக்கம் உடையவர். திறமையாக நடந்து சாந்தாவை ஏமாற்றி விட்டார். அதன் பலனை பரமசிவம் அனுபவிக்க நேர்ந்தது.

இதைக் கேட்ட பரமசிவம் 'அடபாவிப் பயல்களா! குடியை கெடுத்தீர்களே! இதெல்லாமா தமாசு?’ என்று கோபித்துக் கொண்டார். -

'நீங்க உங்க மனம் போன போக்கிலே எல்லோரையும் கேலியும் கிண்டலும் பண்ணுறீகளே; மத்தவங்க உணர்ச்சிகளை