பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

வல்லிக்கண்ணன் கதைகள்


அவள் தந்த தைர்ய இன்ஜெக்ஷன் பிள்ளைவாள் உள்ளத்திலும் சரியானபடி வேலை செய்யத் தவறவில்லை!

அம்மையாரின் நோக்கு சரியான நோக்கு தான்!

மறுநாள் நன்றாக விடிவதற்கு முன்னரே, ஊர்நெடுக மகிழ்வண்ணம் பிள்ளை கடுவாயை சுட்டுக் கொன்றவிஷயம் காது - கண்ணு - மூக்கு - கால் - கை எல்லாம் இணைக்கப்பட்டு விரைவில் பரவியது. கடுவாயைப் பார்க்க ஊர்க்கார்கள் - பெரியவர்கள் சின்னவர்கள், ஆண்கள் பெண்கள் - வந்த வண்ணமாக இருந்தார்கள்.

முற்றத்தின் நடுவிலே எடுப்பாக அந்தப் புலி கிடத்தப் பட்டிருந்தது. கூட்டமிட்டுப் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒன்று சொல்லி புலியை வியந்தார்கள். பக்கத்திலே நின்று பார்த்தது போல, மகிழ்வண்ணம்பிள்ளை எப்படிக் குறிபார்த்தர்ர் - கடுவா என்னமாய் முறைத்து உறுமியது - அவர் எவ்வாறு சுட்டார் - அது எப்படி அலறிக் கொண்டு விழுந்து செத்தது என்று ஒரு சிலர் விளக்கிக் கூறித் தங்கள் ‘வாய் வண்ணம்’ காட்டிக் கொண்டிருந்தார்கள்.

அவர் என்ன சொன்னாலும் ஊர் நம்பத் தயாராக இருந்தது. அவர் மேலும் மேலும் சொல்ல மாட்டாரா என்று எதிர் பார்த்தது.

ஏனெனில், அவர் அந்த ஊரில் முதல் முதலாகப் புலியை சுட்டுக் கொன்ற வேட்டை வீரர், குறி தவறாமல் சுடக்கூடிய தீரர் என்பதை புன்னைக்காடு கண்டு கொண்டது. -

(‘வஞ்சிநாடு’ - 1974)


திட்டம் தவறிப்போச்சு

பேரும் குண இயல்புகளும் அதிசயமாக ஒத்துப் போகிற அபூர்வப் பிறவிகளில் பரிபூரண ஆனந்தம் என்பவரும் ஒருவராவார்.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நம்ம பிள்ளையாண்டான் இப்படி இப்படி நடந்து கொள்வான் என்பதை முன் கூட்டியே ‘தீர்க்க தரிசனம்’ ஆக உணர்ந்து, பையனுக்கு அந்தப் பெயரை குடும்பத்தின் பெரியவர்கள் இட்டார்களா? அல்லது, நமக்கு இந்தப் பெயர் இருப்பதால் நாம் பூர்ணமாக எதையும் செய்ய வேண்டும், எதிலும் பரிபூரணம் காண்பதே நமது வாழ்க்கை