பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம்


"அஹஹ, ஒண்டிப் புலியாமா அவம் பேரு' ஏன், தன்றவர் டான் புளியின்னு பேரு வச்சக்டரதுகரியின் இது பேரு வச்சுக்டறதுதானே!அந்த பாச்சா எல்லாம் இன்ஸ்பெக்டர் எல்லைக்கியா பிள்ளையிடம் பலிக்காதய்யா. நான் இந்த எல்லையிலே அடி எடுத்து வைத்ததுமே பய செத்தமாதிரித் தான். 'ஒண்டிப்புலி நொண்டிப் புலி ஆகிவிட்டதுன்னுதான் அர்த்தம்.இத்தனை நாள் வரை டிபார்ட்மெண்ட்டுக்குக் கடுக்கா கொடுத்த மாதிரியிலே, இன்னமும் புலியாபுள்ளை வாலாட்ட முடியாது. ஈயை நசுக்கிற மாதிரியிலே நசுக்கிப் போடுவேன்.ஆமா !” என்று அட்டகாசப் பேச்சு உதிர்த்தார் இன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை.

இடி இடிபேறுவோடு மோதுகிறது. வைரம் வைரத்தோடு உராய்கிறது. ஒண்டிப்புலி தனக்குச் சரியான ஜதையோடு மோதவேண்டிய காலம் வத்துவிட்டது.

இவ்விதம் எண்ணினார்கள் அந்த வட்டாரத்தில் வசித்தவர்கள். கட்சி பிரிந்து வாதித்து மகிழ்ந்தார்கள். "என் சேவல் பெரிது...உன் சேவல் வலியது"என்ற தோரணையிலே.

ஒண்டிப்புலிக்கு எத்தனை பக்தர்கள் இருந்தார்களோ அத்தனை பக்தர்கள் எல்லைக்கியா பிள்ளைக்கும் இருந்தார்கள். ஆகவே அந்தப் பிராந்தியத்திலே உற்சாக ஜாரம் விஷ வேகத்திலே பரவியிருந்தது.

    🞸 🞸🞸 🞸


ன்ஸ்பெக்டர் எல்லைக்குநாத பிள்ளை நீதியும், நேர்மையும் ஒரு சிறிதும் வழுவாத குணக்குன்று. நம்பின்பேருக்கு நடராசா, நம்பாத பேருக்கு எமாசா!' என்று அவர் புகழ் நெடுகப் பரவியிருந்தது. அவரை நம்பிக் கும்பிட்டுக் குழையடிப்பதினாலே அவரை 'நட