பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சம்



நாசா'வாகக் கொண்டுவிட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதியை, நேர்மையை, உண்மையை, சட்டத்தை, தான் அங்கம் வகித்து வளர்க்கிற இலாக்காவை நம்பி ஒழுங்காகச் செயல் புரியவேண்டும் என்பதே அவர் பிறரிடம் எதிர்பார்க்கும் விஷயம்.

சட்டத்திற்கு அஞ்சாதவர்களைக்கூட தனது கைச் சவுக்குக்கு அஞ்சி நடுங்கும்படி செய்யும் உறுதி பெற்றவர் அவர். 'இன்ஸ்பெக்டர் எல்லைக்கியா பிள்ளை' வருகிறார் என்பதை அறிவிக்கும் மோடடார் சைக்கிளின் ‘டபடப' சப்தம்; அதைக் தொடர்த்து அறிவிக்கும் வீணர்களின் ஓடுதல்களும் ஒழிதல்களும். மன்னன் வரும்போதே சவுக்கை இடதுசாரி வலதுசாரி என்று வீசி விளாசிக்கொண்டுதான் வருவான் ! என வியப்பர் பலர்.

வருடக் கணக்கிலே பிடிபடாமல் 'டிமிக்கி' கொடுத்துக்கொண்டிருக்கும் 'கேஸ்களை' பைசல் பண்ணுவதற்கு எல்லைக்கியா பிள்ளைதான் வந்து சேருவார். எப்பாடுபட்டாவது ஒழித்துக் கட்டிவிடுவார். அதனால்தான் அவரை 'எமன்' என்று பலர் கருதியதில் தவறு ஒன்றும் இல்லை.

🞸🞸🞸🞸


'ஒண்டிப் புலியாபிள்ளையைப் பெற்றெடுத்தவர்கள் அவருக்குச் சரியான பெயரையும் சூட்டினார்கள் என்று வியக்காமல் இருக்கமுடியாது.

எதிலுமே பெரிய புலிதான் அவர். 'எமப்பளுவன்' 'மலைக் கோப்பன்' 'வில்லாதி வில்லன்' 'விளைஞ்ச கொம்பன்' 'சூரப்புலி' என்றெல்லாம் அவரை அர்ச்சித்து வந்தாாகள பலரும.