பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 வஞ்சம்



"என்ன நீங்க!விறகைத் திருப்பி விட்டிங்களே?” என்று விசாரித்தார் அவர்.

"பண்ணையார்வாள்! கோபிக்கக்கூடாது. லஞ்சம் எல்லையா பிள்ளையிடம் கிடையாது" என்று ஓங்கி அடித்தார் இன்ஸ்பெக்டர்.

பண்ணையாரின் முகம் கறுத்தது. "இது லஞ்சம் என்ற எண்ணத்தோடு கொடுக்கலியே. நண்பர் என்ற நினைப்பிலே அன்போடு அனுப்பி வைத்தேன். அதுதவறா? என்றார்.

‘இனிமேல் அதுமாதிரி எதையுமே அனுப்பாதீங்க. இவ்வளவு நாள் ஸெர்வீஸ்லேயே இல்லாத புதிய பாடத்தை எல்லைக்குநாதன் உங்க நட்புக்காக கற்றுக் கொள்ளணுமா என்ன? ஹெஹ்..!"

இன்ஸ்பெக்டரின் அழுத்தமான பேச்சு பண்ணையாரின் இதயத்தில் கல் போல் விழுந்தது. "நீங்கள் தவறான மனோபாவம் கொண்டிருக்கிறீர்கள்..” என்று தொடங்கினார் அவர்.

எல்லைக்குநாதர் மிடுக்காகச் சிரித்தார்.சொன்னார் 'உங்கள் அகராதிதான் புதிதாகப் பதிப்பிக்கப்பட வேண்டும. நான் இருககற இடத்திலே தவறுக்கு இடமில்லை! தவறு தலை காட்டவே கூடாது.

ஒண்டிப்புலி ஒரு தினுசாகப பாாததார். முதல் சந்திப்பின் போது அவர் எறிந்த பார்வையின் ஞாபகம் தான் வந்தது இன்ஸ்பெக்டருக்கு.

தனி ரகமாகச் சிரிப்பொலி பரப்பினார் பண்ணையார். முன்பொரு தடவை அவர் சிரித்தது எதிரொலித்தது எல்லைக்குநாதரின் நினைவு வெளியிலே.