பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வஞ்சம்



"பிசாசுப்பய இது! என்ன ஓட்டம் ஓடிச்சு பார்த்தீர்களா! விசம் ஐயா விசம். அது கொடுக்கைத்தான் பாருங்களேன்!" என்று வாய் பிளந்து நின்றார் சுப்பையாப் பிள்ளை.

மாடசாமி ‘நட்டுவாக்காலி' கடித்துச் செத்துப் போனவர்களைப் பற்றி அளந்து கொண்டிருந்தான்.

திண்ணைத் தூணிலே குறுகுறுவெனச் சாய்ந்து உட்கார்ந்துவிட்ட மீனாட்சியம்மா பெருமூச்செறிந்தாள். "கோமதி அம்மன்தான் காப்பாத்தினா. அவதான் என்னைத் திண்ணைப்பக்கம் கூட்டியாந்து விட்டா........ இவொ என்ன செய்யிதோன்னு பார்க்க நான் வெளியே வந்தேன். சட்டுனு கண்லே பட்டது. கறுப்பா ஒன்னு ஓடியாறது தெரிஞ்சுது. இவொ காலுக்கிட்டே வந்திட்டுது. இன்னும் கொஞ்சம் தாமதிச்சிருந்தா இவொ காலிலே ஒரு போடு போட்டிருக்கும். எனக்கு மேலு நடுக்குச்சு. என்னது சொல்லணும், ஏது பேசணுமின்னே தோணலே, காலைத் தூக்குங்க, தூக்குங்க'யின்னு கத்தினேன்........ இவ்வளவு பெரிய நட்டுவாக்காலியை நான் பார்த்ததே கிடையாதம்மா! ........கோமதித் தாய்க்கு இந்த ஆடித் தவசுக்கு ரெண்டு ரூபா கொடுத்து அனுப்பணும். இப்பவே ரூபாயை எடுத்து முடிஞ்சு வச்சிரணும்" என்று பேசிக் கொண்டிருக்தாள் அவள்.

எல்லைக்கு நாத பிள்ளை ஒன்றுமே பேசவில்லை. கொஞ்ச நேரம் அவர் கண்கள் ஜீவனற்று, இயக்கமற்று கரு மொத்தையாகி - தான் சிதறிய ஒருவிதத் திரவ பதார்த்தத்திலே நனைந்து - கோரமாய் அருவருப்பும், அச்சமும் தருவதாய் கிடந்த சடலத்தின் மீதே பதிந்திருந்தன. சற்று நேரத்திற்கு முன்பு அதன் அங்கங்களிலே இருந்த இயக்கமென்ன! அச்சம் எழுப்பிய சக்திதான் என்ன! ஆபத்துக்கு இரையாகிச் சாகாமல்