பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு, சமூகத்தில் பெண்ணின் நிலைமையை உருக்கமாகச் சித்திரிக்கும் நாவல் வெறும் கோயில்.

'கருகிய மொட்டு தனிரகமான படைப்பு. திருமணம் மூலம் இல்லற வாழ்வில் ஈடுபடுகிற ஆண்கள் பெண்கள் எல்லோருமே பொருத்தமான ஜோடிகளாக இணை சேர்வதில்லை. அவர்களுடைய தாம்பத்திய வாழ்வு சத்தோஷமாக அமைந்திருப்பதில்லை. <砾育”蕨) உணர்வில் ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட தரங்களில் இருப்பது தான் குடும்ப வாழ்வு அமைதியும் ஆனந்தமும் அற்றுப்போவதற்கான அடிப்படைக் காரணம் ஆகும்

என்று காண்டேகர் கருகிய மொட்டு’ நாவலில் வலிவுறுத்துகிறார்.

அந்நாட்களில், தமிழுக்குப் புதுமையாகத்

தோன்றிய ஒரு உத்தியில், எழுதப்பட்ட நாவல் கருகிய மொட்டு வாழ்க்கையில், தாம்பத்திய இன்பத்தில் வேறு வேறு உணர்ச்சித் தரங்களில் இருந்த சில ஆண்களும் பெண்களும், ஆசிரியரை சந்தித்து அவரவர் கதைனைச் சொல்கிறார்கள். கணவன் காம உணர்வு மிகுதி உடையவனாக இருப்பான்; மனைவி அவ்உணர்வு போதுமான அளவு பெற்றிராதவளாக இருப்பாள். இன்னொரு ஜோடியில், பெண் காமஉணர்வு மிகையாகவும் ஆண் அவ்உணர்வு குறைவாகவும் கொண்டிருப்பர். சம அளவுஉணர்வு கொண்ட ஆணும் பெண்ணும் இணைந்த குடும்பமும் உண்டு. இப்படிப்பட்ட ஆண்களும் பெண் களும் தனித்தனியே சொன்ன அந்தரங்க விஷயங்களை

இ வாசகர்களும் விமர்சகர்களும் 40